
திருமணம்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஸ்கா ஷர்மாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.அதிலிருந்து சமூக வலைத்தளத்தில் ஆக்கிரமித்து கொண்டது இந்த அழகு ஜோடி.இவர்கள் போடும் போட்டோக்களுக்கு லைக் பிய்த்து கொண்டு செல்லும்.
வாழ்த்து
இந்நிலையில் திருமணமத்திற்கு பிறகு அனுஸ்கா நடித்துள்ள படம் பரி.இப்படத்தை ரோசிட் ராய் இயக்கியுள்ளார்.இந்த படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இப்படத்திற்கு அனுஷ்காவின் கணவரான விராட் கோலி தனது மனைவியின் நடிப்பு சிறப்பாக இருந்தது என்று டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தடை
இந்நிலையில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள பரி திரைப்படத்திற்குப் பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.குரான் மற்றும் இந்து மந்திரங்களை கொண்டு மாயாஜாலம் செய்வதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளதால் பாகிஸ்தானில் தடை செய்வதாக தணிக்கை சான்றிதழ் அமைப்பு தெரிவித்துள்ளது.
ரசிகர்கள்
இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.குறிப்பாக பாகிஸ்தானில் விராட் கோலியை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.ஆனால் அவரது மனைவியின் படத்திற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.