பிக்பாஸ் வீட்டிற்க்குள் நுழைய காத்திருக்கும் தெலுங்கானா போலீஸ்..! விசாரணை வளையத்திற்குள் வனிதா..!

By ezhil mozhi  |  First Published Jul 2, 2019, 7:52 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களும் ஒருவரான வனிதா, தனது 3 ஆவது மகளான  ஜெனிதாவை பார்த்துக்கொள்ளாமல் யாரிடமோ ஒப்படைத்து விட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளார்என அவருடைய இரண்டாவது கணவரான ஆனந்த் ராஜ் தெலுங்கானா காவல் நிலையத்தில் புகார் அளித்து, காவலரை தன்னுடனே சென்னைக்கு அழைத்து வந்துள்ளாராம்.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களும் ஒருவரான வனிதா, தனது 3 ஆவது மகளான ஜெனிதாவை பார்த்துக்கொள்ளாமல் யாரிடமோ ஒப்படைத்து விட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளார்என அவருடைய  இரண்டாவது கணவரான ஆனந்த் ராஜ் தெலுங்கானா காவல் நிலையத்தில் புகார் அளித்து, காவலரை  தன்னுடனே சென்னைக்கு அழைத்து வந்துள்ளாராம்.

Tap to resize

Latest Videos

ஆனந்த் ராஜ் உடன் child welfare officer மற்றும் தெலுங்கானா காவல் ஆய்வாளர் ஒருவரும் நசரேத் பேட்டை காவல் நிலையத்தில் காத்திருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் இடம், நசரத் பேட்டை எல்லைக்கு உட்பட்டது என்பதால், இந்த விவகாரம் தொடர்பாக, நசரத்பேட்டை காவல் ஆய்வாளரிடம் உதவியை நாடி உள்ளனர் ஆனந்த் ராஜ் மற்றும் அவர் அழைத்து வந்த தெலுங்கானா போலீசார்.

வனிதாவின் 2 ஆவது கணவர் ஆனந்த் ராஜ் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், "தனக்கும் வனிதாவிற்கும் பிறந்த குழந்தையான ஜெனிதாவை சரிவர கவனித்துக்கொள்ளாமல் வெளியில் விட்டுவிட்டு அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளார். நான் அங்கே சென்று அவரிடம் முறையிட வேண்டும்.. நான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல அனுமதி கொடுங்கள். என் மகளை நானே பார்த்துக்கொள்கிறேன். மகள் ஜெனிதாவை வெளியில் விட்டுவிட்டு  நிகழ்ச்சி முக்கியமா.? எனவே வனிதா மீது புகார் கொடுத்து உள்ளேன். எனக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து அவரிடம் பேச வேண்டும் என பல குற்றசாட்டுகளை முன்வைத்து நசரத் பேட்டை காவல் நிலையத்தில் காத்திருக்கிறார் இரண்டாவது கணவரான ஆனந்த் ராஜ்.

இந்த விவகாரம் தற்போது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வனிதா தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீதர் இது குறித்து தெரிவிக்கும் போது, "அரெஸ்ட் வாரண்ட் இருந்தால் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய முடியும்.புகார் கொடுத்து விட்டால், அதற்கான சம்மன் அனுப்பட்டும்..பிறகு மற்றவற்றை பார்த்துக்கொள்ளலாம்" என கூலாக சொல்கிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ள, மீரா மிதுன் தொடர்பாகவும் வழக்கு உள்ளது. வனிதா விஜகுமார் தொடர்பாகவும் வழக்கு உள்ளதால், இவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அவர்களின் டாஸ்க்  நிறைவேற்றுவதில் கவனமாக உள்ளனர். ஆனால் அவர்கள் தொடர்பான வழக்குகளில் வெளியில் என்ன நடக்கிறது என்பது தெரியாமலே இருக்கின்றனர். பிக்பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2  விட சீசன் 3 பரபரப்பாக செல்லும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

click me!