ஜூலை 15 முதல் சினிமா ஷூட்டிங்கிற்கு அனுமதி... முதல்வர் ஜெகனை வாழ்த்தும் தெலுங்கு திரையுலகம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 10, 2020, 1:26 PM IST
Highlights


தமிழகத்தில் இதுவரை சினிமா படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில்,தெலங்கானாவில் படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே முடங்கி கிடந்த சினிமா உலகம் தற்போது தான் கொஞ்சம் புத்துணர்வு பெற ஆரம்பித்துள்ளது. இறுதி கட்டத்தில் இருக்கும் பட வேலைகளை முடிக்க ஏதுவாக போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளை முடிக்க ஏதுவாக போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளுக்கும்,  ஊரடங்கால்  வேலை இழந்து வாடும் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் சீரியல் படப்பிடிப்புகளையும் நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இதையும் படிங்க: சொன்னதை செய்த ராகவா லாரன்ஸ்... விஷமிகளின் ஆட்டத்தை அடக்க ஆதாரத்துடன் வெளியிட்ட பதிவு...!

தமிழகத்தில் இதுவரை சினிமா படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில்,தெலங்கானாவில் படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறைவான ஆட்கள் மற்றும் முறையான தடுப்பு நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். இதையடுத்து  நடிகர் சிரஞ்சீவி தலைமையிலான தெலுங்கு திரையுல பிரமுகர்கள், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை நேற்று சந்தித்தனர். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், நடிகர் நாகார்ஜுனா, இயக்குநர் ராஜமவுலி, தயாரிப்பாளர்கள் சி.கல்யாண், தில்ராஜு ஆகியோர் பங்கேற்றனர். 

 

இதையும் படிங்க: 

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ஆந்திர மாநிலத்திலும் ஜூலை 15ம் தேதி முதல் படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார். 
கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமாத்துறை மிகப்பெரிய பாதிப்புகளை சந்தித்துள்ளது. எனவே திரைத்துறையை காப்பதற்காக சில சலுகைகளை வழங்கும் படி கோரிக்கை விடுத்துள்ளோம். பெரிய பட்ஜெட் படங்களுக்கான டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிப்பது, தியேட்டர்களுக்கு மின் கட்டண சலுகை, வரி குறைப்பு உள்ளிட்ட சில சலுகைகள் கோரப்பட்டுள்ளதாக கூறினார். 

இதையும் படிங்க: 

மேலும் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி விசாகப்பட்டினத்தில் சினிமாத்துறைக்காக ஒதுக்கீடு செய்த 300 ஏக்கர் ஸ்டூடியோக்கள் கட்டப்படும் என முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்பை தெலுங்கு திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் வரவேற்றுள்ளனர். 

click me!