அன்னையர் தினம் அன்று இயற்கை அன்னையை இழிவுபடுத்திய பிரபல இயக்குனரின் ட்வீட்

 
Published : May 14, 2018, 09:30 AM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
அன்னையர் தினம் அன்று இயற்கை அன்னையை இழிவுபடுத்திய பிரபல இயக்குனரின் ட்வீட்

சுருக்கம்

Telugu directors tweet insults mother nature

நேற்று உலகெங்கிலும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. பல பிரபலங்களும் அன்னையர் தினத்தன்று தங்கள் அன்னையரை நினைவு கூர்ந்து, தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். பிரபல தெலுங்கு இயக்குனரான ராம் கோபால் வர்மாவும் தனது அன்னையர் தின வாழ்த்தை டிவிட்டரில் பதிவு செய்திருந்தார்.இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில்  பல வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தனது பதிவில் “ அன்னையர்கள் சிறந்தவர்கள் என பதிவிட்டிருந்தார். ஆனால் சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால் அப்பாவி குழந்தைகளையும், அன்னையர்களையும் கொல்லும் இயற்கை அன்னை மோசமானவள்” என அவர் பதிவிட்டிருந்தார். இப்பதிவில் அவர் இயற்கை அன்னையை மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்திருந்தது பல்வேறு தரப்பினராலும் கண்டனத்திற்குள்ளாகி இருக்கிறது.

 

மனிதர்களாகிய நாம் இயற்கைக்கு இழைத்த அநீதிகளை மறந்து விட்டு, இயக்குனர் ராம் கோபால் வர்மா இது போன்ற வாசகங்களை உபயோகித்து ,இயற்கை அன்னையை இழிவு படுத்தி இருப்பது சரி அல்ல. என இவர் பதிவை படித்தவர்கள் கோபமாக பதில் தெரிவித்திருக்கின்றனர்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிங்கத்த பார்த்து ஷாக் ரியாக்‌ஷன் கொடுத்த சந்திரகலா அண்ட் சாமுண்டீஸ்வரி: கார்த்திகை தீபம் டுவிஸ்ட்!
கம்பீரமாக எண்ட்ரி கொடுத்த பாஸ் கார்த்திக்- சூடுபிடிக்க தொடங்கிய கார்த்திகை தீபம்; கொண்டாடும் ஃபேன்ஸ்!