சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா மீது கமிஷனர் அலுவலகத்தில் பகீர் புகார்...

Published : Jul 16, 2019, 05:29 PM IST
சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா மீது கமிஷனர் அலுவலகத்தில் பகீர் புகார்...

சுருக்கம்

பள்ளி ஆசிரியர்கள் குறித்து பல இழிவான கருத்துக்களைக் கொண்ட கதையை உருவாக்கி ‘வாத்தியார்களால்தான் நாடே நாசமாப் போச்சி’ என்று வசனங்களும் வைத்துள்ள ‘ராட்சசி’படத்தை தடை செய்வதோடு, ஜோதிகா மற்றும் படக்குழுவினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

பள்ளி ஆசிரியர்கள் குறித்து பல இழிவான கருத்துக்களைக் கொண்ட கதையை உருவாக்கி ‘வாத்தியார்களால்தான் நாடே நாசமாப் போச்சி’ என்று வசனங்களும் வைத்துள்ள ‘ராட்சசி’படத்தை தடை செய்வதோடு, ஜோதிகா மற்றும் படக்குழுவினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஜோதிகா திருமணத்துக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அந்த வகையில் தற்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராட்சசி' படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

இந்த படத்தில் ஜோதிகா அரசு பள்ளி தலைமை ஆசிரியையாக நடித்துள்ளார். ஆசிரியர்களும், ஆசிரியைகளும் மாணவ-மாணவிகளுக்கு ஒழுங்காக பாடம் நடத்தாமல் கதை புத்தங்கள் படிப்பது, செல்போனில் முடங்கி கிடப்பது, மாணவர்கள் சிகரெட் பிடிப்பது, வன்முறையில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் படத்தில் உள்ளன. அரசு பள்ளி ஆசிரியைகள் அதிக சம்பளம் பெறுவதாகவும், அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மீது போதிய கவனம் செலுத்தாததால் அவர்கள் மருத்துவம் போன்ற உயர்கல்விகளில் சேர முடியவில்லை என்ற வசனங்களும் படத்தில் உள்ளன. இந்த வசனமும், காட்சிகளும் உண்மையாக உழைக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என்று எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பி.கே.இளமாறன் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகை ஜோதிகா மற்றும் படக்குழுவினர் மீது ஒழுங்கு நடவடிக்கை கோரியும் ‘ராட்சசி’படத்தைத் தடை செய்யக்கோரியும் ஒரு புகார் அளித்துள்ளார்.அதில்,...ஜோதிகா நடிப்பில் வெளி யாகி உள்ள “ராட்சசி” படத்தில் வாத்தியார்களால்தான் நாடே கெட்டு பேச்சு என்பது போன்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளன. எனவே ‘ராட்சசி’ படத்தை தடை செய்து ஜோதிகா மற்றும் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!