தனுஸ்ரீ தத்தாவுக்கு அன்று பீரியட்ஸ்! அதனால் தான் பிரச்சனை செய்தார்! தயாரிப்பாளரின் அதிரவைக்கும் காரணம்!

Published : Oct 06, 2018, 02:01 PM IST
தனுஸ்ரீ தத்தாவுக்கு அன்று பீரியட்ஸ்! அதனால் தான் பிரச்சனை செய்தார்! தயாரிப்பாளரின் அதிரவைக்கும் காரணம்!

சுருக்கம்

நடிகை தனுஸ்ரீ தத்தா விளம்பரத்திற்காகவோ, அந்த 3 நாட்கள் சமயத்திலோ, நடிகர் நானா படேகர் மீது குற்றஞ்சாட்டியிருக்கலாம் என்று, திரைப்படத்துறையினர் கூறியுள்ள சம்பவம், மேலும் சர்ச்சையைகிளப்பியுள்ளது.

2008ஆம் ஆண்டு ஹார்ந் ஓகே ப்ளீஸ் திரைப்படத்தில் நடித்தபோது, பிரபல நடிகர் நானா படேகர் தம்மை தேவைஇல்லாமல் பல இடங்களில் தொட்டு, பாலியல் ரீதியாக சீண்டியதாக நடிகை தனுஸ்ரீ தத்தா குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து, இந்தி திரைப்பட உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. தனுஸ்ரீ தத்தாவுக்கு தரவாக சில பிரபல நடிகைகள்கரம் கொடுத்த நிலையில், பெரும்பாலான நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் நானாபடேகருக்கே ஆதரவாக உள்ளனர்.

இந்த நிலையில், நடிகை தனுஸ்ரீ தத்தா விவகாரம் தொடர்பாக, ஆங்கில் செய்திச் சேனல் ஒன்று நடத்திய ஸ்டிங்ஆபரேஷனில், திரைப்பட இயக்குநர் ராகேஷ் சரங், தயாரிப்பாளர் சமீ சித்திக் ஆகியோர் உளறிக் கொட்டியுள்ளனர். இந்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது நடிகைதனுஸ்ரீ தத்தா மாதவிடாய் காலத்தில் இருந்தபோது, நடிகர் நானா படேகர் மீது, பாலியல் புகாரைகூறியிருக்கலாம் என்று தயாரிப்பாளர் சமீ சித்திக் மோசமாக விமர்சித்துள்ளார்.


 
அதே நேரத்தில், நானா படேகர் மீது குற்றம் சாட்டுவது எளிது என்றாலும், அவரை எப்படி குற்றவாளி என்றுஏற்றுக்கொள்ள முடியும்? அதை எவ்வாறு நிரூபிக்க முடியும்? என்று கஜேந்திரா என்பவர் கேள்வி எழுப்பியதுடன், இந்த விவகாரத்தில் நடிகை தனுஸ்ரீ தத்தா நீதிமன்றத்தைத் தான் நாட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
இந்த விவகாரத்தில் சினி அண்ட் டிவி ஆர்டிஸ்ட் அசோசியேசன்  எதையும் செய்ய முடியாது. இது என்னநீதிமன்றமா என்றும் அவர்கள் பேசிக்கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. அதேபோல் ஹார்ன் ஓகே ப்ளீஸ்படத்தின் இயக்குனரான ராகேஷ் சரங்கும், தனது வார்த்தைகளால்,நடிகை தனுஸ்ரீ தத்தா மீது சேற்றை வாரிஇறைத்துள்ளார்.

நானா படேகர் மீது புகார் கூறி தம்மை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக, இந்த பொய்யானகுற்றச்சாட்டை நடிகை தனுஸ்ரீ தத்தா கூறியிருக்கலாம் என்று விமர்சித்த அவர், தற்போதெல்லாம் படுக்கையறைவீடியோ காட்சிகள் இணையதளத்தில் சர்வ சாதாரணமாக வெளிவந்து கொண்டிருக்கும் போது, இவையெல்லாம்விளம்பரத்திற்காகவே செய்யப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த காட்சிகள் அனைத்தும் ஆங்கில ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இந்தி திரைப்பட உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி