
‘சர்கார்’ ஆடியோ வெளியீட்டுப் பரபரப்பால் திரும்பின திசையெல்லாம் செய்திகள் ஒரே விஜய்மயமாக இருப்பதால் காண்டானார்களோ என்னவோ, நேற்று முதல் அஜீத்தின் ‘விஸ்வாஸம்’ குரூப் மெல்ல களம் இறங்கியிருக்கிறது.
அதாவது அஜீத்தின் ‘விஸ்வாஸம்’ படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை தனது மேனேஜர் ராஜேஸை பினாமியாகக் கொண்ட கே.ஜே.ஆர். நிறுவனத்துக்காக நயன்தாரா வாங்கிவிட்டதாக தகவல்.
இப்படத்தில் மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்கி நடிக்கும் நயன் எக்ஸ்ட்ராவாக எடுத்திருக்கும் ரிஸ்க் 47 கோடி ரூபாய். யெஸ் நயன் ‘விஸ்வாஸம்’ படத்தின் ரைட்ஸை மொத்தம் 50 கோடிக்கு வாங்கியிருக்கிறாராம்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் ‘விஸ்வாஸம்’ தற்போது பாதி முடிந்துள்ள நிலையில், பொங்கல் ரிலீஸாக திட்டமிடப்பட்டு வருகிறது. படத்தை நயன் வாங்கியிருக்கும் தகவலை தயாரிப்பு நிறுவனம் இதுவரை உறுதிசெய்யவோ மறுக்கவோ இல்லை.
இரட்டை வேடங்களில் அஜீத் நடித்துவரும் இப்படத்தின் ஸ்டில்கள் இன்னும் முறைப்படி வெளியாகாத நிலையில், முற்றிலும் நரைத்து பஞ்சைப்பராரியாக அஜீத் நிற்கும் ஒரு ஸ்டில் அடிக்கடி வலதளங்களில் வெளியிடப்படுகிறது. ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட அந்த ஸ்டில்லைக் கண்டு செம அப்செட்டில் இருக்கிறாராம் அஜீத்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.