
தமிழ் ராக்கர்ஸ் மேல் கடுமையாக விமர்சனம் செய்தார் சிங்கம் 3 தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.
உங்களுக்கு பிப் 9 (சிங்கம் 3 ரிலீஸ் ) ல் பதில் சொல்கிறோம் என்று தமிழ் ராக்கர்ஸ் ஓப்பன் சாலஞ் விட்டுள்ளனர்.
தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் மிகப்பிரபலமானது. ஒரு படம் ரிலீசான அன்றே அந்த படத்தை இணையதளத்தில் பதிவேற்றுவதில் வல்லவர்கள்.
கபாலி படம் வெளியாகும் நேரத்தில் படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் அறிவிக்க உன்னால் முடிந்ததை பார் என தயாரிப்பாளர் தரப்பு சவால் விட இணைய தளத்தை சைபர் போலீசார் முடக்கினர்.
ஆனாலும் சொன்னபடி வேறொரு பெயரில் தமிழ் ராக்கர்ஸ் கபாலி படத்தை வெளியிட்டனர். தற்போது வெளியாகி ஓடிகொண்டிருக்கும் விஜய் நடிக்கும் பைரவா படத்தை எச்டி தொழில் நுட்பத்தில் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் விஜய் ஆண்டனியின் எமன் படத்தையும் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘எமன்’ படத்தின் பாடல்கள் இன்று காலை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் நிறுவனர் ஞானவேல்ராஜா, தமிழ் ராக்கர்ஸ் எனும் பைரசி இணையதளத்தை மேடையிலேயே திட்டினார்.
தமிழ் படங்கள் ரிலீஸான அன்றே அதனை தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள். சமீபகாலமாக குறிப்பிட்ட நேரத்தை கூறி இந்த நேரத்தில் இந்த படத்தை பதிவேற்றம் செய்வோம் என துணிச்சலாக சொல்லியே செய்து வருகின்றனர்.
அதே போல் அடுத்த வாரம் வெளியாகயிருக்கும் ‘சிங்கம்-3’ படத்தையும் ரிலீஸ் செய்யப்போவதாக கூறியுள்ளனர்.
இதை மனதில் வைத்தே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, ‘எமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் ராக்கர்ஸை திட்டித்தீர்த்துள்ளார்.
அதனை சற்றும் பொருட்படுத்தாமல் ‘சிங்கம்-3’ ரிலீஸாகும் பிப்ரவரி 9-ம் தேதியே தமிழ் ராக்கர்ஸில் அந்த படத்தை பதிவேற்றுவோம் என்று பதில் கூறியுள்ளனர் தமிழ் ராக்கர்ஸ் டீம்.
ஞானவேல் ராஜா நன்றாக பேசியுள்ளீர்கள் உங்கள் காலண்டரில் குறித்து வைத்து கொள்ளுங்கள் பிப்.9 (சிங்கம் 3 ரிலீஸ் எங்கள் நாள் ) எங்கள் நாள் என்று கூறியுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.