"கேட்டதுக்கு பதில் சொல்லுங்க சார்" - ட்விட்டரில் தவறாக பதிவிட்டு சிக்கிக்கொண்ட ஜி.வி பிரகாஷ்

 
Published : Feb 04, 2017, 04:23 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
"கேட்டதுக்கு பதில் சொல்லுங்க சார்" -  ட்விட்டரில் தவறாக பதிவிட்டு சிக்கிக்கொண்ட ஜி.வி பிரகாஷ்

சுருக்கம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சீன் போட்ட ஜி.வி.பிரகாஷ் கடலில் எண்ணெய் படலம் மிதப்பதை கண்டித்து தவறான படத்தை ட்விட்டரில் பதிவு செய்தார்.

இது பற்றி ட்விட்டரில் பத்திரிக்கையாளர் மற்றும் சிலர் கேள்வி எழுப்பியதற்கு பதிலளிக்க முடியாமல் தப்பியோடினார்.

சமீப காலமாக திரைத்துறையை சேர்ந்த அரைகுறைகள் கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று பொதுவான மக்கள் பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து தங்கள் அறிவின்மையை வெளிபடுத்துகின்றனர்.

நாடு முழுவதும் வெடித்து கிளம்பும் பிரச்சனையை நாமும் எதாவது பற்றவைப்போம் என்று எதையாவது சொல்வதும் பிரச்சனை பெரிதானவுடன் ஓடி ஒளிவதும் வாடிக்கையாக உள்ளது.

இவர்கள் பேசாமல் இருந்தாலே இவர்களுக்கு மதிப்பு இருக்கும். பேசிய பின்னர்தான் இவர்கள் எவ்வளவு அறிவிலிகள் என்பதை ரசிகர்கள் தெரிந்து கொள்கின்றனர்.

பீட்டா என்கிற அமைப்பும் அதன் நோக்கம் என்பதை அறியாமல் கூப்பிட்டார்கள், டீ ஷர்ட் கொடுத்தார்கள், பார்ட்டி கொடுத்தார்கள் என்றவுடன் விலங்குகள் மேல் திடீர் பாசம் பொத்துக்கொண்டு வந்து பேட்டி கொடுத்த பிரபலங்கள் அனைவரும் பீட்டாவின் உண்மை முகம் தெரிந்தவுடன் சிக்கலில் சிக்கி மன்னிப்பு கேட்ட கதை எல்லாம் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கண்டோம்.

இதே போன்று சினிமா பிரபலங்கள் ட்விட்டர் பேஸ்புக்கில் தங்களுக்கு தோன்றுவதை எழுதுவதும் பின்னர் பிரச்சனைகளில் சிக்கி கொள்வதும் வாடிக்கையாக உள்ளது.

ஜல்லிக்கட்டு போரட்டத்தில் துள்ளிக்கொண்டு வந்து கண்டதையும் பேசி கானாமல் போன ஜி.வி.பிரகாஷ் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தனது ட்விட்டரில் சென்னை கடலில் மிதக்கும் எண்ணெய் படலம் என்று அமெரிக்காவில் எடுக்கபட்ட ஒரு படத்தை பதிவிட்டு விமர்சனம் செய்திருந்தார்.

இதை பார்த்த பத்திரிகையாளர் ஒருவர் "நீங்கள் பிரபலம் என்பதால் பொதுமக்களை தவறாக வழிநடத்த கூடாது. ஜல்லிக்கட்டு பார்முலாவை எப்போதும் பயன்படுத்த நினைக்காதீர்கள். இந்த படம் எங்கே எப்போது எடுக்கபட்டது என்று சொல்வீர்களா?" என்று கேட்டிருந்தார்.

இதை பார்த்து ஆத்திரமடைந்த ஜி.வி.பிரகாஷ் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் நீங்கள் பத்திரிகையாளர்கள் மீடியாக்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் என்ன செய்தீர்கள் என்று பதில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அந்த இன்னொருவர் ஜி.வி பிரகாஷ் நீங்கள் பிரபலம் அதனால் இது போன்ற படங்கள் போடுவதற்கு முன் விசாரித்து போடவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஜி.வி.பிரகாஷுக்கு பதிலளித்த பத்திரிக்கையாளர் "நாங்கள் மாணவர் போராட்டங்களை பதிவு செய்தோம், உங்களை போன்ற பிரபலங்கள் எப்படி மாணவர்களை தவறாக வழிகாட்டினிர்கள் என்பதையும் பதிவிட்டோம். நான் கேட்டது எண்ணெய் படலம் தங்கள் பதிவிட்ட படம் எங்கே எடுத்தது அதற்கு பதில் சொல்லுங்கள் சார் என்று பதிலளித்திருந்தார்.

ஆனால் அதற்கு பதிலளிக்க முடியாத ஜி.வி.பிரகாஷ் "நீங்கள் பத்திரிகையாளர்கள், பல விசயங்களை பதிவு செய்கிறீர்கள், சிறப்பாக பணியாற்றுகிறீர்கள் அதை மட்டுமே செய்யுங்கள். பிரபலங்களின் பின்னால் ஓடாதீர்கள்".

இதற்கு பதிலளித்த பத்திரிகையாளர் "நீங்கள் இது போன்ற படங்களை ஏன் பதிவிடுகிறீர்கள், எதற்கு ஒரு பதற்றத்தை உருவாக்குகிறீர்கள். படத்தை பதிவிடும் முன்பு எங்கே எடுத்தது என்று விசாரிக்காமல் ஏன் பதிவிடுகிறீர்கள்? அக்கறையுடன் செயல்பட வேண்டுமென்ற அக்கறையுடன் செயலபடவில்லை என்று கேட்டதற்கு பதில் அளிக்க முடியாமல் ட்விட்டரை விட்டே ஜி.வி.பிரகாஷ் ஓட்டமெடுத்தார்.

மேற்படி ஜி.வி.பிரகாஷ் பதிவிட்ட படம் அமெரிக்காவில் பசிபிக் கடலில் எண்ணெய் கசிவின் பொது எடுக்கபட்ட ஒரு படம். தன தவறை ஒத்துக்கொள்ளாமல் வாதம் செய்யும் ஜி.வி. பிரகாஷ் அவர் நடித்த ஒரு படத்தில் தமிழகத்தில் ஒரு பெண் கூட கற்புடையவள் அல்ல என்று வசனத்தை வைத்து விமர்சனத்திற்கு ஆளானார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாடி இஸ் நோ மோர்; படையப்பா' ரீ-ரிலீசுக்கு அப்பாவின் புகைப்படத்துடன் வந்த பாச மகள்: திரையரங்கில் நெகிழ்ச்சி!
31 ஆண்டுகாலப் பந்தம்: ஒன்றாக 'சூர்ய நமஸ்காரம்' செய்யும் பிரபுதேவா, வடிவேலு: வைரலாகும் வீடியோ!