’கமல் கட்சியின் அத்தனை வேட்பாளர்களையும் தகுதி நீக்கம் செய்யவேண்டும்’...முஸ்லிம் லீக் தேர்தல் ஆணையத்தில் முறையீடு...

By Muthurama LingamFirst Published May 14, 2019, 1:12 PM IST
Highlights

தனது சர்ச்சையான பேச்சால் இந்து முஸ்லீம் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கும் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அத்தனை வேட்பாளர்களின் அங்கீகாரத்தையும் ரத்து செய்யவேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்ற கமலின் கண்டுபிடிப்பு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்துக்களின் எதிரியாக மட்டுமே கமல் பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இஸ்லாமிய அமைப்புகளும் கமலுக்கு எதிராகக் களம் இறங்க ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் கமலுக்கு எதிராகக் கண்டன அறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு முஸ்லிம் லீக் அமைப்பு இன்று தலைமை தேர்தல் ஆணையரிடம் அளித்த மனுவில்,... இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு அவரது கட்சி வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் அந்த கட்சியை தடை செய்து இது போன்ற சம்பவங்கள் இனி வரும் காலங்களில் நடைபெறாத வகையில் தேர்தல் ஆணையம நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

click me!