டாஸ்மாக்கை தொடர்ந்து தியேட்டர்களை திறக்க திட்டம்... தமிழக அரசின் முடிவு இதுவா?

By Kanimozhi PannerselvamFirst Published May 8, 2020, 6:46 PM IST
Highlights

நேற்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது மிகப்பெரும் சர்ச்சையை உருவாகியுள்ளது. இருப்பினும் சமூக இடைவெளியை கடைபிடித்து குடிமகன்கள் சரக்கு பாட்டில்களை வாங்கிச் சென்றனர். 

சீனாவின் வுகான் நகரின் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 210க்கும் மேற்பட்ட நாடுகளை ஆட்டி படைக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் தலை எடுத்த போதே, மக்கள் அதிகம் கூடும் இடங்களான, கோவில், ஷாப்பிங் மால், திரையரங்கம் போன்ற இடங்கள் இழுத்து மூடப்பட்டது. 

இதையும் படிங்க: புடவையில் அம்மாவையே ஓரங்கட்டிய குஷ்பு மகள்... ஓவர் ஸ்லிம் லுக்கில் தாறுமாறு வைரலாகும் போட்டோ...!

இதனால் புது பட ரிலீஸ்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. பல நாட்களாக தியேட்டர்களை மூடிவைத்துள்ளதால் எலிகள் தொல்லை அதிகரித்திருப்பதாகவும், இருக்கைகளை கடித்து குதறும் எலிகளை என்ன செய்வதென்று தெரியாமலும் தியேட்டர் உரிமையாளர்கள் கவலையில் உள்ளனர். ஊரடங்கு முடிந்தாலும் சமூக இடைவெளியை காக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் தியேட்டர்களை திறக்க மேலும் சில மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: அம்மாடியோவ்! முடியை வைத்து முன்னழகை மறைத்த இலியானா... பெருமூச்சு விட்ட ரசிகர்கள்...!

இந்நிலையில் தியேட்டர் உரிமையாளர்களுக்கான வாட்ஸ் அப் குழுவில் விநியோகஸ்தரும், தியேட்டர் உரிமையாளருமான திருப்பூர் சுப்ரமணியம் பேசியதாக ஆடியோ பதிவு ஒன்று பரவியது. அதில் தியேட்டர்களை திறக்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனிடையே ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தியேட்டர்களை திறக்கலாம் என்ற யோசனையில் தமிழக அரசு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: 

நேற்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது மிகப்பெரும் சர்ச்சையை உருவாகியுள்ளது. இருப்பினும் சமூக இடைவெளியை கடைபிடித்து குடிமகன்கள் சரக்கு பாட்டில்களை வாங்கிச் சென்றனர். அதேபோல் விரைவில் 50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்துகளை இயக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது மே மாதத்தின் இறுதியிலோ, ஜூன் மாதத்தின் முதல் வாரத்திலோ தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதிக்கலாம் என்று கூறப்படுகிறது

click me!