
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் நவம்பர் 12ம் தேதி வெளியிடப்படும் என்றும், அடையாறு எம்.ஜி.ஆர் ஜானகி கலை கல்லூரியில் காலை 8மணி முதல் மாலை 4மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் 5 அணிகள் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பாண்டியன் ஸ்டோர் சித்ராவை அலேக்காக தூக்கிய வருங்கால கணவர்... விஜய் டி.வி. கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்போட்டோஸ்!
ஏற்கனவே விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக உள்ள டி.ராஜேந்தர் இந்த முறை தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இதற்கான அவர் நாமினேஷன் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிடும் டி.ஆரின் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது.அதில் யார் எந்த பொறுப்புக்கு போட்டியிட உள்ளனர் என்ற விவரங்கள் வெளியிடப்பட்டன.
நிர்வாக பொறுப்புக்கு போட்டியிடுபவர்கள் விவரம்:
தலைவர் - டி,ராஜேந்தர்
செயலாளர் - டி.மன்னன் (மன்னன் பிலிம்ஸ்)
செயலாளர் - என்.சுபாஷ் சந்திரபோஸ் (திருப்பதி பிரதர்ஸ்)
பொருளாளர் - கே.ராஜன்
துணைத்தலைவர் -கே,முருகன்
துணைத்தலைவர் - பி.டி.செல்வகுமார்
ஏ.எம்.ரத்னம், என்.பிரபாகரன் , எம்.அசோக் சாம்ராஜ்,மனோஜ் குமார், மனோ பாலா, சக்தி சிதம்பரம், பருத்திவீரன் சரவணன் உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.