ஆன்மீக அரசியலா? அப்படின்னா என்ன? யோசிச்சு தான் சொல்றீங்களா? கமல் விமர்சனம்

 
Published : May 19, 2018, 01:26 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
ஆன்மீக அரசியலா? அப்படின்னா என்ன? யோசிச்சு தான் சொல்றீங்களா? கமல் விமர்சனம்

சுருக்கம்

Tamil politicians interview about his colleague and an emerging politician

ரஜினி நடித்திருக்கும் காலா திரைப்படம் விரைவில்  திரைக்கு வரவிருக்கிறது. இந்த படம் குறித்து பேசுகையில் ரஜினி ”இது அரசியல் படமல்ல அரசியல் பேசும் படம்” என  தெரிவித்திருக்கிறார். சமீபகாலமாக ரஜினி கொடுத்துவரும் பேட்டிகள் மூலம் ,அவரது அரசியல் பிரவேசம் மட்டும் உறுதி என்பது தெரிகிறது. ஆனால் ரஜினி தனது கட்சி பற்றியோ, கொள்கை பற்றியோ, இதுவரை எந்த உறுதியான தகவலும் அளிக்கவில்லை.

இதற்கிடையே கமல் தனது ”மக்கள் நீதி மய்யம்” கட்சியை ஆரம்பித்து அதன் கொள்கைகளை அறிவித்து, தனது அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார். சமீபத்தில் கமல் கலந்து கொண்ட ஒரு தொலைக்காட்சி பேட்டியின் போது அவரிடம், ரஜினி கட்சி தொடங்கினால் அவருடன் கமல் இணைவாரா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அந்த கேள்விக்கு பதிலளித்த கமல், முதலில் ரஜினியின் கட்சி கொள்கைகள் என்ன என தெரியவேண்டும். அதன் பிறகு தான் நாங்கள் இணைவோமா? இல்லையா? என்பது பற்றி கூற முடியும். அதிலும் ரஜினி நடத்தப்போவது ஆன்மீக அரசியலாக இருந்தால், கொஞ்சம் அதிகமாகவே யோசிக்க வேண்டும். என தெரிவித்திருக்கிறார் கமல். நாஸ்திகவாதியான கமலின் இந்த பதிலில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. என தெரிவிக்கிறது அவரது நட்பு வட்டம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி