வெள்ளையா இருந்தா... தலையில் தூக்கி வைத்து ஆடும் தமிழக மக்கள்..! மனம் ஏற்காது... ஆனாலும் நிதர்சனமான உண்மை இதுதான்..!

By ezhil mozhiFirst Published Jul 1, 2019, 4:13 PM IST
Highlights

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாபாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு குறிக்கோளே, நமக்குள் இருக்கும் ஒருவரை போட்டியாளர்கள் மூலமாகவே  தெரிந்துகொள்ளலாம்

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு குறிக்கோளே, நமக்குள் இருக்கும் ஒருவரை போட்டியாளர்கள் மூலமாகவே தெரிந்துகொள்ளலாம்..என்ற அளவிற்கு ஒவ்வொருவரும் எப்படி நடந்துக்கொள்கிறார்கள்..? எதற்கு கோபம் கொள்கிறார்கள்..? அவர்களுடைய திறமை என்ன..? என அனைத்தும் தெரிந்துகொள்ளலாம். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட.. இந்த நிகழ்ச்சியை பார்த்து ரசித்து வரும் தமிழ் மக்கள் ஒரு விதமான போக்கில் எடுத்துக்கொள்வார்கள்..

அதாவது "வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் என்கிற மாதிரி" வெள்ளையாய் இருக்குற போட்டியாளர்களுக்கு தான் கொஞ்சம் மவுசு அதிகமாக இருக்கு என்பதை புரிய வைத்துள்ளது இந்த நிகழ்ச்சி. பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்ட ஜூலியை எடுத்துக்கொள்ளுங்களேன். இந்த பெண்ணை எப்படி அறிந்துகொண்டோம். ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் பல லட்ச கணக்கில் மாணவ செல்வங்கள் முதல் இளைஞர்கள் பெரியவர்கள் என எவ்வளவோ பேர் கலந்துகொண்டு இருந்தாக..இருந்த போதிலும் ஜூலி வீடியோ வைரலானது.அதற்கு காரணம் அந்த பெண் கோஷமிட்ட விதம் என்றாலும், அதை விட அதிகமா கோஷமிட்ட எத்தனையோ பேர் இருந்தாங்க... இருந்தாலும் நம்ம மக்கள் தமிழச்சி என தூக்கி கொண்டாடினார்கள்..பின்னர் பிக்பாஸ் வந்தாங்க ஜூலி. அங்கேயும் ஓவியா மற்றும் ஜூலிக்கான விஷயம் தான் பெரிதாக பார்க்கப்பட்டது. யாராலயும் மறக்க முடியாத ஒன்னு ஓவியா ஆர்மி...இவங்களும் வெள்ளை நிறம் தான்....

அடுத்து ஜூலையை  எதிர்த்து பல மீம்ஸ் வந்தாலும், ஜூலியும் கலரு தான். அடுத்து பிக்பாஸ் சீசன் -2 பாருங்களேன்.பிக்பாஸ் சீசன் டைட்டில் வின்னர் ரித்விகா சுமாரான கலர். அவர் மீது பெரிதா எந்த விமர்சனமும் வைக்கவில்லை.

ஆனால் இவரை அந்த அளவிற்கு தூக்கி கொண்டாடவில்லை தமிழ் மக்கள். கொண்டாட்டம் ஒன்றுமே இல்லை என சொல்லி விட முடையாது..இருந்தாலும் வின்னர் என்ற சம்பிரதாயத்துக்கு கொண்டாடினாங்க. அதே சீசன் இரண்டில் கலந்துகொண்ட, யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ஜனனி ஐயர் என அனைவருக்கும் வேறு லெவல் மவுஸ் இருப்பதை உணர்த்துவதாக அமைந்திருந்தது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு இருந்த பல விஷயங்கள்.

இதற்கு அடுத்து, தற்போது பிக்பாஸ் 3 இல், கலந்துகொண்டுள்ள இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியாவிற்கு நிகழ்ச்சி தொடங்கிய அடுத்த நாளே சமூக வலைதளத்தில் ஆர்மி கிளம்பிடுச்சு. அவர் எப்படி என தெரியாது ..? அவர் சிறந்த நபரா..? அவருடைய குணநலன்கள் என்ன என்பது யாருக்குமே தெரியாது.. அதற்குள் ஆர்மி தொடங்குகிறார்கள் ஏனென்றால்.. நம் தமிழக மக்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்க...கொஞ்சம்  வெள்ளையா இருந்தா போதும். உடனே தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள் நம் தமிழ் மக்கள் என்ற பாணியில் உள்ளது இந்த விஷயங்கள்.

இதே போன்று கண் அடித்து பிரபலமான பிரியா வாரியார் கூட வெள்ளை நிறம் தான்.. இதுவே, மாநிற ஒரு தமிழ் பெண்ணை தூக்கி வைத்து கொண்டாட நம் தமிழக மக்களே தயாராக இல்லை என்பது காட்டுகிறது.. உதாரணம். பிக்பாஸ் சீசன் 2 டைடல் வின்னர் தமிழ் பெண்ணான ரித்விகாவை கூட கொண்டாடல.. வேறு என்ன விளக்கம் தேவை இதற்கு...? 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களை பற்றி தெரிந்துகொள்ள முடியுமோ இல்லையோ..? அனால் வெள்ளையா இருந்தா போதும்.. வந்தாரை வாழ வைத்து விடுவார்கள் நம் தமிழ் மக்கள் ...அதாவது பிரபலமடைய வைத்து, நடிகையாக்கி அழகு பார்ப்பார்கள். மற்றவர்கள் ஒரு ஓரமாய் போய் நிற்கலாம். 

இதுதான் தமிழர்களின் மன நிலை... மனம் ஏற்க மறுத்தாலும் நிதர்சனமான உண்மை இதுவே... கூடுதல் உதாரணத்திற்கு இந்த வீடியோவை பாருங்கள்.

https://tamil.asianetnews.com/video/cinema/actor-sathish-shocked-on-old-man-crush-video--pty7d9

click me!