கேரளாவில் வெளியாகும் தமிழ் படங்களுக்கு வச்சிட்டாங்கய்யா ஆப்பு!

By manimegalai aFirst Published Jan 31, 2019, 5:47 PM IST
Highlights

தமிழில் உள்ள முன்னணி நடிகர்கள் விஜய், விக்ரம், ரஜினி, அஜித் உள்ளிட்ட நடிகர்களை கேரளாவிலும் அதிக அளவு ரசிகர்கள் உள்ளனர். இதனால் அங்கு தமிழ் படங்கள் வெளியானால் கேரள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை குறி வைத்து தற்போது புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளது.

அதாவது தமிழில் வெளியாகும் முன்னணி நடிகர்கள் படங்களுக்கு   மலையாள படங்களை விட அதிகமான வரவேற்பு ரசிகர்களிடமும் தியேட்டர் அதிபர்களிடம் இருந்து வருகிறது.

இது மலையாள திரையுலகில், வெளியாகும் படங்களின் வசூலை அதிகம் பாதித்து வருவதாக தொடர்ந்து, குற்றச்சாட்டு தயாரிப்பாளர்களிடம் இருந்து வைக்கப்பட்டு வந்தது. 

இதனால் , கேரள திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், தமிழ் படங்களை கேரளாவில் வெளியிடுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழ் படங்களுக்கு ஆப்பு வைத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியுள்ளது "தமிழ் படம் இனிமேல் கேரளாவில் அதிகபட்சம் 125 தியேட்டர்களில் மட்டுமே வெளியாக முடியும் எனவும் அதேபோல மலையாளத்தில் வெளியாகும் படங்கள் அதிகபட்சமாக 160லிருந்து 170 தியேட்டர்கள் வரை மட்டுமே ரிலீஸ் செய்யமுடியும் என கூறியுள்ளனர்.

மலையாளத்தில் மிக பிரம்மாண்டமாக, அதிக பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கு மட்டும் விதிவிலக்காக அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்கிற முடிவை அமல் படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. 
 
click me!