தேசிய விருதுகள் வழங்குவதில் ஒரு கண் துடைப்பு நாடகம் இருக்கிறது...பிரபல இயக்குநர் பகீர்...

By Muthurama LingamFirst Published Aug 13, 2019, 10:49 AM IST
Highlights

இவ்வாண்டு தேசிய விருதுகளில் தமிழ்த்திரையுலகம் முற்றிலும்  புறக்கணிக்கப்பட்டதாக பல விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் அதில் சில கண் துடைப்பு வேலைகள் இருக்கத்தான் செய்கின்றன என்று தனது அனுபவத்திலிருந்து பிரபல இயக்குநர் வசந்த பாலன் முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
இயக்குநர் வசந்தபாலன் இது குறித்து எழுதியுள்ள பதிவில்…தேசிய விருது வழங்குவதில் தமிழ் திரைப்படங்களும்,தமிழ் கலைஞர்களும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.இந்த வருடம் தேசிய விருதுக்கு ’பேரன்பு’,’பரியேறும் பெருமாள்’,’வடசென்னை’,’ராட்சசன்’,’96’ உள்ளிட்ட நிறைய நல்ல,திறமையான,தகுதியான திரைப்படங்கள் சென்றிருந்தும் ஏன் புறக்கணிக்கப்பட்டது தமிழ் சினிமா ? பேரன்பு திரைப்படத்தில் மம்முட்டி , சாதனா தன் உயிரை கொடுத்து அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் தந்திருந்தார்.யுவனின் இசை,தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு என்ன குறை கண்டீர்கள் ? 

கேள்விப்பட்ட போது தான் தெரிந்தது,தமிழில் இருந்து நல்ல நடுவர்களும் தேர்வு குழுவுக்கு அழைக்கப்படவில்லை.கண்துடைப்பாக நடுவர்கள் அழைக்கப்படுகின்றனரா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய விருது கமிட்டி நடுவராக ஒரு தினத்திற்கு முன்பு என்னை அழைத்தார்கள்.முப்பது நாள் டெல்லி பணிக்கு ஒரு நாள் முன்பு தகவல் தெரிவிப்பது சரியா? இது கண்துடைப்பின்றி வேறென்ன ? இந்த நிலை மாறவேண்டும்.தமிழ் உச்ச நட்சத்திரங்களும்,திரை ஆளுமைகளும், தமிழகத்தின் அரசியல் தலைவர்களும் இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

click me!