Jaibhim | ஜெய்பீம் நிஜ கதாநாயகரை சந்தித்த இயக்குனர்கள் ; என்ன விஷயம் தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : Nov 16, 2021, 10:02 PM ISTUpdated : Nov 16, 2021, 10:14 PM IST
Jaibhim | ஜெய்பீம் நிஜ கதாநாயகரை சந்தித்த இயக்குனர்கள் ; என்ன விஷயம் தெரியுமா?

சுருக்கம்

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துருவை சந்தித்து பாராட்டு தெரிவித்து நினைவுப்பரிசு வழங்கியுள்ளனர்.

1993-ஆம் ஆண்டில் கடலூரின் முதனை கிராமத்தில் நிகழ்ந்த ராஜாக்கண்ணு கொலை  தொடர்பாக நடைபெற்ற  வழக்கு விசாரணையின் சாராம்சமே ஜெய்பீம் திரைப்படம். 13 ஆண்டுகளுக்குப் நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த  2006-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முக்கிய ங்கம் வகித்த சந்துரு வழக்கறிங்கரே ஜெய் பீமின் உண்மை கதாநாயகன். பல்வேறு தரப்பினரின் மிரட்டல்களையும் அதிகாரங்களையும் கடந்து அந்த வழக்கில் ராஜாக்கண்ணுவின்கொலைக்கு நீதி பெற்று கொடுத்த வழக்கறிஞர் கே.சந்துருவின் வாதங்கள் முக்கியம் வாய்ந்ததாக இருந்தது.

30 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றிய சந்துரு பல பொது நல வழக்குகள், மனித உரிமை வழக்குகள், பெண்கள் உரிமை வழக்குகள் ஆகியவற்றில் வாதாடினார். அந்த வழக்குகளுக்கு கட்டணம் எதுவும் பெறாமல் சேவை மனப்பான்மையுடன் வழக்காடியுள்ளார்.

பல ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றிய பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக, 2001, 2004ம் ஆண்டுகளில் பரிந்துரைக்கப்பட்டும் தீவிரவாதிகளின் வழக்கறிங்கர் என அன்றைய அரசால் சந்துரு புறக்கணிக்கப்பட்டுள்ளார். பின்னர் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு ‘வழக்கறிஞர் என்பது தொழில். யாருக்காகவும் யாரும் வாதாடலாம் என கூறி உச்ச நீதி மன்றம் கடந்த 2006-ம் ஆண்டு சென்னை உயர் நீதி மன்ற நீதிபதியாக சந்துருவை நியமித்துள்ளது. பதவியேற்ற உடன் இவர் செய்த காரியம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தனது சொத்து விவரங்களை உச்ச நீதிமன்ற நீதிபதியிடன் சந்துரு சமர்ப்பித்தது தான் அந்த ஆச்சர்யத்திற்கு காரணம். 

இவர் நீதிபதியாக இருந்த காலத்தில் ஒரு நாளைக்கு 75 வழக்குகள் என தான் மொத்தம் 95 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பளித்துள்ளார். பஞ்சமி நிலங்களை, வேறு யாருக்கும் ஒதுக்கக் கூடாது, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்தில், இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும், கோவில்களில், பெண்கள் பூஜை செய்வதற்கு எந்த தடையும் இல்லை  உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

,அதோடு மட்டுமல்லாமல் தனது ஓய்வின் பொது தான் புதிதாக வாங்கிய சொத்து விவரங்களை சமர்ப்பித்த சந்துரு அவர்கள் வழக்கமாக  நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் பிரிவு உபச்சார விழா தேவையில்லை என மறுத்துள்ளார். ஓய்வு நாளன்று  தனக்கு வழங்கப்பட்ட சொகுசு காரை ஒப்படைத்துவிட்டு தன் நண்பர்களுடன் மின்சார ரயிலில் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இவரின் செயல்பாடுகள் மற்ற நீதியரசருக்கு ஒரு எடுத்துக்காட்டாகவே இருந்து வந்துள்ளது.  ராஜாகண்ணு வழக்கு குறித்த இவரது தகவல்களே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று தமிழ் திரைப்பட இயக்குநர்களான பாக்கியராஜ், பார்த்திபன், பிரபுதேவா உள்ளிட்டோர் ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துருவை சந்தித்து பாராட்டு தெரிவித்து நினைவுப்பரிசு வழங்கியுள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மாஸ் ஸ்கெட்ச்! இனி தோல்வியே இல்லை! சூர்யாவுக்கு ஹாட்ரிக் ஹிட்டு உறுதி: அதிரடித் திட்டம் என்ன?
சன் டிவி vs விஜய் டிவி : டிஆர்பி வேட்டையில் யார் டாப்பு? இந்த வார டாப் 10 சீரியல் பட்டியலில் அதிரடி மாற்றம்