பிக்பாஸ் சீசன் 4 ஒளிபரப்பு எப்போது ஆரம்பம்?... வெளியானது அசத்தலான தகவல்...!

By Kanimozhi PannerselvamFirst Published Sep 4, 2020, 6:23 PM IST
Highlights

இந்நிலையில் நிகழ்ச்சி எப்போது தொடங்க உள்ளது என்பது குறித்து தகவல்கள் கசிந்துள்ளது. 

தமிழில் பிக்பாஸ் சீசன் 3 கடந்த வருடம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஓவ்வொரு நாளும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் ரீல் லைப் பிரபலங்கள் ரியல் வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை தெறித்து கொள்ளவே பலர் பிக்பாஸ்  நிகழ்ச்சியை விரும்பி பார்க்கிறார்கள்.  நார்மலாகவே அடுத்து வீட்டு பிரச்சனைகளை தெரிந்து கொள்வதில் ஆர்வம் எல்லா மனிதருக்கும் அதிகம் தானே. அதை தான் கொஞ்சம் மார்டனாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்புகிறார்கள். 

தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோ வெளியாகி தாறுமாறு வைரலானது. அதுமட்டுமின்றி வரும் செப்டம்பர் 6ம் தேதி மாலை 6 மணி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பட்ட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகிவிட்டது. தெலுங்கில் ஆரம்பிச்சிட்டாங்களே தமிழில் இன்னும் எப்போ தொடங்கும் என தெரியவில்லையே என இங்குள்ள பிக்பாஸ் ரசிகர்கள் வாய்விட்டு வறுத்தப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், கமல் ஹாசனின் பிக்பாஸ் 4 புரோமோ வீடியோவும் வெளியானது. ஆகஸ்ட் 27ம் தேதி வெளியான வீடியோவில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் தோன்றிய கமல் ஹாசன் பிக்பாஸ் 4 தொடங்க உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

தற்போது அதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த முறை ஷிவானி நாராயணன், ஷிவாங்கி, ரம்யா பாண்டியன், கிரண், அதுல்யா, சூர்யா தேவி, சனம் ஷெட்டி, டிக்டாக் இலக்கியா, வித்யுலேகா ராமன், குக்வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் பங்கேற்பதாக கூறப்படுகிறது.  அதுமட்டுமின்றி ஹரிஷ் கல்யாண் ஜோடியாக இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஹீரோயினாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின. மேலும் கலக்கப் போவது யாரு, அது இது எது புகழ் காமெடி நடிகர்  அமுதவாணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது. 


இந்நிலையில் நிகழ்ச்சி எப்போது தொடங்க உள்ளது என்பது குறித்து தகவல்கள் கசிந்துள்ளது. அதன்படி அக்டோபர் 4ம் தேதி போட்டியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும், அதற்கு அடுத்த நாளான திங்கள்கிழமை முதல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த வார இறுதியில் ஒரு ஸ்பெஷல் புரோமோ வீடியோ வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

click me!