சித்தார்த் நடித்துள்ள, டக்கர் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சித்தார்த்தின் புதிய அவதாரம், திவ்யன்ஷாவின் தைரியமான கதாபாத்திரம் மற்றும் ஹிட் பாடல்களின் தொகுப்பு என திரையரங்குகளில் வெளியாகியுள்ளது 'டக்கர்' திரைப்படம்.
தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் வலுவான கதாபாத்திரங்கள் என தனது படங்களைத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டுபவர் நடிகர் சித்தார்த். இதில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவரது கமர்ஷியல் படங்கள் மற்றும் பரிசோதனை முயற்சிகள் என அவரது அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் தங்களது வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர்.
'டக்கர்' அவரது முதல் காதல் ஆக்ஷன் என்டர்டெய்னர் திரைப்படம் ஆகும். படத்தின் வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்களுக்கு மத்தியில் அற்புதமான வரவேற்பைப் பெற்றுள்ளது. சித்தார்த்தின் ஸ்கிரீன் பிரசன்ஸ், கதாநாயகி திவ்யன்ஷாவின் தைரியமான கதாபாத்திரம் மற்றும் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்த ஹிட் பாடல்கள் என இவை அனைத்தும் சேர்ந்து இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மேலும், இளைஞர்கள் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களின் ரசனைகளுக்கு ஏற்ற வகையில் படத்தில் சிறந்த அம்சங்கள் இருப்பதாக ரசிகர்கள் பாசிட்டிவ் விமரிசனங்களை இப்படத்திற்கு தெரிவித்து வருகிறார்கள். சித்தார்த் மற்றும் திவ்யன்ஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, அபிமன்யு சிங், விக்னேஷ்காந்த் மற்றும் ராம்தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் தயாரித்துள்ள ‘டக்கர்’ படத்தை கார்த்திக் ஜி கிரிஷ் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் நேற்று வெளியான நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவலை படக்குழு அதிகார பூர்வமாக, சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது. அதன்படி 'டக்கர்' திரைப்படம் முதல் நாளில்,ரூ. 2.43 கோடி வசூலித்துள்ளதாம். இளசுகளை ஈர்க்கும் திரைக்கதை என்பதாலும், விடுமுறை நாள் என்பதாலும் வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
Massive Response For ♥️
Worldwide Day 1 Collection 2.43 Cr+ 🔥
Directed by
🌟 pic.twitter.com/SHbC8ity6H