
அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு ஹோட்டலின் புல்வெளியிலேயே படுத்துத் தூங்கவிரும்புவதாக சக நடிகருடன் அடம்பிடித்த சம்பவத்தைக் கொஞ்சமும் சங்கடப்படாமல் வெளியிட்டிருக்கிறார் ஜெயம் ரவியின் 25 வது பட நடிகை டாப்ஸி.
தமிழில் ‘ஆடுகளம்’ படத்தில் அறிமுகமான டாப்ஸி இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார். ‘பிங்க்’,’மன்மர்சியான்’, கடைசியாக அமிதாப்புடன் நடித்த ‘பட்லா’ உட்பட அனைத்தும் செம ஹிட் படங்கள் என்பதால் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார். தமிழில் டச் விட்டுப்போகக் கூடாது என்பதற்காக அவ்வப்போது எட்டிப்பார்க்கும் அவர் ‘கேம் ஓவர்’ படத்துக்கு அடுத்தபடியாக லக்ஷமண் இயக்கும் ஜெயம் ரவியின் 25 வது படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றின் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்ட அவரிடம் குடிப்பழக்கம் பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது தனக்கு குடிப்பழக்கம் இருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட அவர் ஒரு முறை தான் நடிகர் விக்கி கவுஸுடன் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஓவராகக் குடித்துவிட்டு, அந்த ஹோட்டலின் முன் பகுதியில் இருந்த புல்வெளியில் போய் செட்டில் ஆனதாகவும் போதை இன்னும் அதிகமானதால் ‘இன்று இரவு தூங்குவதற்கு இதுவே சிறப்பான இடம். இங்கேயே படுத்து உறங்கிவிட்டு நாளை காலை வீடு திரும்பலாம் என்று அடம்பிடித்ததாகவும் கூறியுள்ளார்.
அதையடுத்து நடிகர் விக்கி, ‘நீ ஓவராய் அடம்பிடித்தால் உன்னை இங்கேயே விட்டுவிட்டுச் செல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை’ என்று மிரட்டி தன்னை மிகவும் வற்புறுத்தி அழைத்துச் சென்றதாகவும் டாப்ஸி கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.