
சினிமாவைப் பொறுத்தவரை அம்மா கதாபாத்திரம் என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன் தான். இதுவரை முன்னணி நடிகர்கள் அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், என பலருக்கு அம்மாவாக நடித்து விட்டார்.
மேலும் ராம் படத்தில் ஜீவாவிற்கு அம்மாவாக நடித்ததற்காக தேசிய விருதையும் பெற்றார். ஆனால் இவருக்கு நடிகர் விஜய்யின் அம்மாவாக நடிக்க வேண்டும் என பல ஆண்டுகளாகவே ஒரு கனவு இருந்து வருகிறதாம்.
அது மட்டும் இதுவரை நிறைவேறவில்லை என பீல் பண்ணி ஒரு பேட்டியில் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். வளர்ந்து வரும் கதாநாயகிகளுக்கு தான் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது என்று பார்த்தால், தற்போது சரண்யா பொன்வண்ணனுக்கும், விஜய்க்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை வந்துள்ளது.
தொடர்ந்து அடுக்கடுக்காக படங்களில் நடித்து வரும் விஜய், ஏதாவது ஒரு படத்தில் சரண்யா பொன்வண்ணனுக்கு மகனாக மாறுவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.