
"ஆமாம்.. நான் அவருடன் பழகுகிறேன்"...! ஒரே வார்த்தையில் போட்டுடைத்த டாப்ஸி..!
பிரபல பாலிவுட் நடிகையான டாப்ஸி பன்னு சினித்துறையில் கால் பதிந்த நாள் முதலே தனது முழு நடிப்பு திறமையை நிரூபித்து வருகிறார். படத்தின் கதையை தேர்ந்தெடுப்பது முதல் சவாலான பாத்திரங்களில் நடிப்பது வரை எல்லா விஷயங்களையும் பகிர்ந்து இருந்தாலும் தன் சொந்த வாழ்க்கை குறித்து பெரிய அளவில் வெளிப்படுத்தியதே கிடையாது..
ஆனால் தற்போது தான் ஒருவருடன் நெருங்கி பழகி வருவதை பற்றி முதல் முறையாக வாய் திறந்து உள்ளார் டாப்ஸி. ஆனால் அவர் ஒரு நடிகரோ அல்லது கிரிக்கெட் வீரரோ கிடையாது என தெரிவித்து உள்ளார். இருந்த போதிலும் தாப்ஸி குறிப்பிடும் அந்த நபர் டென்மார்க்கைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரரான மத்தியாஸ் போயுவாகத்தான் இருக்க முடியும் என ஏற்கனவே பல்வேறு கிசுகிசு வெளியாகி உள்ளது.
தனது 6 வயதிலிருந்தே பேட்மிண்டன் விளையாடி வரும் மத்தியாஸ் போயு "ஐரோப்பிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2006" இல் கார்ஸ்டன் மொகென்சனுடன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று முதல் சாதனையை பதிவு செய்தார்.
அதன் பின், போ மற்றும் மொகென்சன் இருவரும் இணைந்து டென்மார்க் சூப்பர் சீரிஸ், பிரஞ்சு சூப்பர் சீரிஸ், சீனா ஓபன் மற்றும் இங்கிலாந்து சூப்பர் சீரிஸின் மற்ற அனைத்து போட்டியிலும் விளையாடி வெற்றி பெற்றனர்.
ஆனால் அவரது வாழ்க்கையில் மிக முக்கிய தருணமாக அமைந்த ஒரு நிகழ்வு என்றால் அது லண்டனில் நடந்த "ஒலிம்பிக்கில் போட்டி 2012" இல் வெள்ளிப் பதக்கம் வென்றதே ..
டாப்ஸியின் சினித்துறை பயணத்தை பொறுத்தவரை... கடைசியாக கொடுத்த வெற்றி படமான "மிஷன் மங்கல்" ஐ தொடர்ந்து அடுத்து வெளியாக உள்ள சாண்ட் கி ஆங்க் (aand Ki Aankh) படத்திற்காக பெரும் எதிர்பார்ப்பில் உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.