நான் பழைய டி.ராஜேந்திரனா இருந்திருந்தால்?... அடுக்கடுக்காய் கேள்வி கேட்டு ஆவேசமடைந்த டி.ஆர்....!

By Kanimozhi PannerselvamFirst Published Nov 27, 2020, 3:30 PM IST
Highlights

கடந்த தேர்தலில் மிகக்குறைந்த வாக்கு பெற்றவர்கள் இன்று அதிக ஒட்டு பெற்றது எப்படி என கேள்வி எழுப்பிய அவர், பின் வாசல் வழியாக வாக்களிக்க சிலர் அழைத்து வரப்பட்டது ஏன் என அடுக்கடுக்க குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். 

பல கட்ட சட்டப்போராட்டங்களையும் கடந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் கடந்த22ம் தேதி நடைபெற்று முடிந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல். தேனப்பன் ஆகியோர் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வியடைய தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் டி.ராஜேந்த்கர் புகார் மனு அளித்துள்ளார். 

 

இதையும் படிங்க: “இனி இப்படியே டிரஸ் போடு ராசாத்தி”... ‘குட்டி’ நயன் அனிகாவின் போட்டோஸைப் பார்த்து குதூகலமான ரசிகர்கள்...!

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர், வாக்குப்பதிவு நடைபெற்ற அன்றே வாக்குஎண்ணிக்கை நடைபெருவதுதான் வரலாறு என்றும், அடுத்தநாள் வாக்கு எண்ணியதற்கான காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார். பழைய ராஜேந்திராக இருந்திருந்தால் தேர்தலை புறக்கணித்திருப்பேன் என்று கூறிய அவர், தன்னால் மற்ற போட்டியாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் போராடவில்லை என்று தெரிவித்தார். தேர்தல் தாமதமாக 8.20க்கு தொடங்கியதால் 4.20 வரை நடந்திருக்க வேண்டும் என்றும் ஆனால் 4 மணி வரைதான் நடந்தது என்றும் கூறிய அவர், தேர்தலில் போலியான ஆவணங்கள் அடையாள அட்டைகள் பயன்படுத்தப்பட்டது என்று குற்றம் சாட்டினார். வாக்களித்த 1050 வாக்காளர்கள் பட்டியல் அவர்கள் முகவரி, தொலைபேசி எண்ணோடு வேண்டும் என பதிவாளரிடம் கேட்டிருப்பதாக கூறிய டி.ராஜேந்தர், மணிக்கு மணி வாக்கு பதிவு விவரங்கள், ஓய்வு பெற்ற நீதியரசர் கையெழுத்திட்டு அடையாள அட்டை பெற்றுக்கொண்டவர்கள் பட்டியல் உள்ளிட்டவையும் வேண்டுமென மனு அழித்திருப்பதாக தெரிவித்தார். 

 

இதையும் படிங்க: இங்க நயன்தாரா... அங்க சமந்தா... டாப் லிஸ்டை பார்த்து வயிறெரியும் இளம் நடிகைகள்...!

இந்த ஆதாரங்களை திரட்டி முதல் படியை தொடங்கியிருப்பதாகவும், 1050 ஓட்டுகளில், 800 ஓட்டுகள் தான் நல்ல ஒட்டுகள் எனவும், மீதி கள்ள ஒட்டுகள் எனவும் கூறினார். கடந்த தேர்தலில் மிகக்குறைந்த வாக்கு பெற்றவர்கள் இன்று அதிக ஒட்டு பெற்றது எப்படி என கேள்வி எழுப்பிய அவர், பின் வாசல் வழியாக வாக்களிக்க சிலர் அழைத்து வரப்பட்டது ஏன் என அடுக்கடுக்க குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். தயரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து சந்தா காட்டாமல், தொடர்பில் இல்லாமல் இருந்தவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு வாக்களித்தது எப்படி என சந்தேகம் எழுப்பிய அவர், தயரிப்பாளர் சங்கர் தேர்தலில் இவ்வளவு சூழ்ச்சி... இது இறைவன் தமிழக அரசியலில் நிக்க தனக்கு தந்திருக்கிறான் ஒரு பயிற்சி என்றார். விதிப்படி படம் வெளியிட்டு 5 ஆண்டுகள் ஆகி இருந்தால் மட்டும் தேர்தலில் போட்டியிட அனுமதி உண்டு என்றும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் ஒரே ஒரு திரையரங்கில் ஒரு காட்சி மட்டும் வெளியிட்ட தயரிப்பாளர் தேர்தலில் நின்றார் என்றும் இப்படி தகுதி இல்லாத 3 பேர் தேர்தலில் போட்டியிட்டனர் என்றும் குற்றம் சாட்டினார்.

click me!