பயணம் செய்வது யாருக்குத்தான் பிடிக்காது, ஆனால் நம்மில் பலருக்கு அதற்கான நேரம் எப்போதுமே அமைவதில்லை. அது அமைந்தால் எப்படி இருக்கும்? என்பது தான் ஸ்வீட் காரம் காபி இணைய தொடர்.
இது சரியா? தவறா? என்பது சரியாக தெரியவில்லை, இருப்பினும் அக்கால இளைஞர்களை விட இக்கால இளைஞர்களிடம் இருக்கும் ஒரு மிகப்பெரிய விஷயம் அது, அதாவது இருக்கும் அனைத்தையும் விட்டுவிட்டு தங்கள் மனம் போன போக்கின்படி, இந்த உலகை சுற்றிபார்க்க கிளம்பிச் செல்லும் அந்த அசாத்திய தைரியம் தான் அது.
இன்ஸ்டாகிராம் ரீலிஸ், YouTube ஷார்ட்ஸ் என்று பார்க்கும் அனைத்திலும், எதோ ஒரு நபர் தன் இயல்பு வாழ்க்கையை விட்டுவிட்டு தனக்கு பிடித்த இடத்திற்கு கவலைகளை மறந்து பயணம் மேற்கொள்வதை நம்மால் அனுதினமும் பார்க்கமுடிகிறது.
இந்த விஷயம் அவ்வப்போது படங்களாகவும் வெளிவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் ஆகிய மூவரின் இயக்கத்தில் வருகிற ஜூலை மாதம் 6ம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இணைய தொடர் தான் "ஸ்வீட் காரம் காபி".
இதையும் படியுங்கள் : மாரி செல்வராஜ் மத மோதலை உருவாக்குகிறாரா? 'மாமன்னன்' படம் குறித்து தன்னுடைய கருத்தை கூறிய அமீர்!
பிரபல மூத்த நடிகை லட்சுமி, நடிகை மதுபாலா (மதூ) உள்ளிட்ட பலர் இந்த இணைய தொடரில் நடித்துள்ளனர். ஒரு குடும்பத்தில் இருக்கும் மூன்று பெண்கள் தங்கள் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக மிகுந்த மன அழுத்தம் கொண்டு, இறுதியில் மூவரும் இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறி இந்த உலகைச் சுற்றி பார்க்க கிளம்பும் கதையாக இது அமைந்துள்ளது.
தற்போது இந்த இணைய தொடரின் ட்ரைலர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இறுதியாக சமந்தாவின் சகுந்தலம் படத்தில் நடித்திருந்த மதுபாலா (மதூ) இந்த இணைய தொடரில் நடிகை லட்சுமியின் மருமகளாக நடித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : நீருக்கடியில் சிவா..மாவீரன் ட்ரைலர் தேதி அறிவிப்பு