27 வயது பையன் மீது 43 வயசு நடிகை காதல்! விரைவில் திருமணம்!

Published : Oct 27, 2018, 11:25 AM IST
27 வயது பையன் மீது 43 வயசு நடிகை காதல்! விரைவில் திருமணம்!

சுருக்கம்

முன்னாள் பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென், தன்னை விட 16 வயது குறைந்தவரான மாடல் ஒருவரை காதலிப்பது உறுதியாகியுள்ளது.

முன்னாள் பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென், தன்னை விட 16 வயது குறைந்தவரான மாடல் ஒருவரை காதலிப்பது உறுதியாகியுள்ளது. ஐதராபாத்தில் பிறந்தவரான சுஷ்மிதா சென் இந்தியா தரப்பில் முதன் முதலில் பிரபஞ்ச அழகி என்ற பட்டத்தை வென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். அழகிப் போட்டிகளைத் தொடர்ந்து ஹிந்திப் படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பின்னர் தமிழ் மற்றும் வங்க மொழிப் படங்களில் சுஷ்மிதா சென் நடித்தார். 

நாகார்ஜூனாவுடன் அவர் சேர்ந்து நடித்த படம் ரட்சகன் மிகப்பெரும் வெற்றி பெற்றது. சங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்த முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு வந்து செல்வார் சுஷ்மிதா. 43 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத இந்த நடிகைக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். ஷாக் ஆக வேண்டாம். ரெனீ சென், அலிசா சென் ஆகிய இரு குழந்தைகளை இவர் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். 

இவர் தற்போது உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மாடல், ரொமன் ஷால் என்பவருடன் நெருங்கிப் பழகுவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாகவே இருவரையும் பல இடங்களில் ஒன்றாக பார்க்க முடிந்ததாக பலரும் கிசுகிசுத்து வருகின்றனர். இவர்களுக்குள் இருக்கும் உறவு குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில், ரோமன் ஷாலுடன் தாஜ்மகால் சென்ற சுஷ்மிதா சென், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதைப் பதிவிட்டுள்ளார். 

அதற்கு கீழே தனது வாழ்க்கையின் காதல் என்று குறிப்பிட்டுள்ளார் சுஷ்மிதா சென். இதன் மூலம் இருவரும் காதலிப்பது உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது. மற்றொரு வீடியோ ஒன்றுக்கு கீழே, ரொமான்ஸ் ரிட்டர்ன்ஸ் என்று பதிவிட்டுள்ளார் சுஷ்மிதா சென். ரோமன் சால்ஸ் உடனான காதலால், இதற்கு முன் நட்சத்திர உணவு விடுதிக்குச் சொந்தக்காரரான ரிதிக் பாசின் உடனான உறவை சுஷ்மிதா முறித்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.  எது எப்படியோ சுஷ்மிதாவுக்கு திருமணமானால் சரி என்று நினைக்கும் ரசிகர்கள், ஆனால் ரோமனுக்கோ 27, சுஷ்மிதாவுக்கோ 43.. எப்படி சரியாக இருக்கும் என்றும் எண்ணத் தொடங்கியுள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சவுக்கு சங்கர் கைதுக்கு நான் தான் காரணம்..! தானாக முன்வந்து ஸ்டேட்மெண்ட் கொடுத்த சினிமா தயாரிப்பாளர்
ஆதி குணசேகரனுக்கு ஆட்டம் காட்டும் அப்பத்தா.. அறிவுக்கரசி எடுக்கும் எதிர்பாரா முடிவு - களம் மாறும் எதிர்நீச்சல்