ஆஸ்கர் போட்டியில் 'சூரரைப் போற்று' ... உச்சகட்ட மகிழ்ச்சியில் சூர்யா ரசிகர்கள்...!

Published : Jan 26, 2021, 07:12 PM IST
ஆஸ்கர் போட்டியில்  'சூரரைப் போற்று' ... உச்சகட்ட மகிழ்ச்சியில் சூர்யா ரசிகர்கள்...!

சுருக்கம்

உலக திரையுலகினரின் பாராட்டுகளை அள்ளிய 'சூரரைப் போற்று' திரைப்படம் ஆஸ்கர் குழு உறுப்பினர்களின் பாராட்டுகளையும் அள்ளும் என்பதில் படக்குழுவினர் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்

சூர்யாவின் அசுரத்தமான நடிப்பு, சுதா கொங்கராவின் துல்லியமான இயக்கம், ஜி.வி.பிரகாஷின் ஆர்ப்பரிக்கும் இசை, நிக்கத் பொம்மியின் எதார்த்தமான ஒளிப்பதிவு என அனைத்து பிரிவுகளிலும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது சூரரைப்போற்று திரைப்படம். கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ்ப் படம் என்ற அபார சாதனையைப் படைத்தது. ஏதார்த்தமான மனிதர்களின் அசாதாரண கனவுகளை நனவாக்க எடுக்கும் முயற்சிகள் எவ்வளவு கடினமானது என்பதை சூர்யாவின் நடிப்பு கண்முன் காட்டியது. 

தற்போது 'சூரரைப் போற்று' படக்குழுவினரின் அபாரமான உழைப்புக்கு மேலும் பெருமைச் சேர்க்கும் வகையில் ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்த முறை கரோனா அச்சுறுத்தலால் ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர். ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம். அந்த வரிசையில் பொதுப்பிரிவில் 'சூரரைப் போற்று' திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடுகிறது. 

இந்தப் போட்டியில் தேர்வாகி பரிந்துரை பட்டியலில் இடம்பெறவேண்டும். அதனைத் தொடர்ந்து யார் வெற்றியாளர் என்பதை ஆஸ்கர் மேடையில் அறிவிப்பார்கள்.இந்தப் பொதுப்பிரிவுப் போட்டியில் 'சூரரைப் போற்று' திரையிடலுக்காக அகாடமி திரையிடல் அறையில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது. இந்த அறையில் உள்ள படத்தை ஆஸ்கர் குழு உறுப்பினர்கள் பலரும் பார்த்து எந்தெந்த பிரிவில் இந்தப் படத்தைத் தேர்வு செய்யலாம் என்பதை முடிவு செய்வார்கள். உலக திரையுலகினரின் பாராட்டுகளை அள்ளிய 'சூரரைப் போற்று' திரைப்படம் ஆஸ்கர் குழு உறுப்பினர்களின் பாராட்டுகளையும் அள்ளும் என்பதில் படக்குழுவினர் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்” என்று கூறினார் படத்தின் இனை தயாரிப்பாளர் இராஜ்சேகர் கற்ப்பூரசுந்தரபாண்டியன்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

JioHotstar Watchlist: நண்பர்கள் தினத்தில் பார்க்க சிறந்த தமிழ், இந்தி, ஹாலிவுட் படங்கள்
Songs: தலைவர் ரஜினி வைப்... Gen Z முதல் 90s Kids வரை எனர்ஜி ஏற்றும் 5 மந்திரப் பாடல்கள்!