சன்டிவி முன் சூழ்ந்த சூர்யா ரசிகர்கள்...! கலங்கடித்த “ஒரே ஒரு வார்த்தை”..!

 
Published : Jan 20, 2018, 12:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
சன்டிவி முன் சூழ்ந்த சூர்யா ரசிகர்கள்...! கலங்கடித்த “ஒரே ஒரு வார்த்தை”..!

சுருக்கம்

Surya fans surrounds to sun tv to protest against vj works

சன்டிவி முன் சூழ்ந்த சூர்யா ரசிகர்கள்...! கலங்கடித்த “ஒரே ஒரு வார்த்தை”..!

நடிகர் சூரியா ரசிகர் மன்றத்தினர் சன் டிவியை கண்டித்து எம்ஆர்சி அலுவலகம் முன் தற்போது ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

சன் மியூசிக் சேனல் சூரியாவை தனிப்பட்ட முறையில் கேலி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் ரசிகர்கள் 
மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அனைத்து திரையரங்கங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தை தொடர்ந்து சூர்யா இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க தயாராகி வருகிறார். மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார், அமிதாப்பச்சன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் அமிதப்பச்சனுடன் இணைத்து சூர்யா நடிப்பதை கிண்டல் செய்யும் விதத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினிகள் இரண்டு பேர் அமிதாப் உயரத்தையும் சூரியாவின் உயரத்தையும் ஒப்பிட்டு, 'அமிதாப்புடன் சூர்யா நடிக்கும் போது ஸ்டூல் மீது ஏறி நின்று தான் நடிக்க வேண்டும் என்று கலாய்த்தனர்.

இவர்களின் இந்த பேச்சுக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தத்தோடு, பிரபலங்கள் கருணாகரன், விஷால், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்நிலையில், சூர்யாவின் ரசிகர்கள், சன் மியூசிக் சேனலை கண்டித்து , நடிகர் சூரியா ரசிகர் மன்றத்தினர் சன் டிவியை கண்டித்து எம்ஆர்சி அலுவலகம் முன் தற்போது ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?