
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 31ம் தேதி ரிலீஸாகவுள்ள ‘என்.கே.ஜி’ படத்துக்கு தமிழக கட் அவுட் வரலாற்றில் முதல் முறையாக 210 அடி உயரத்தில் கட் அவுட் வைக்கும் பணி திருத்தணியில் நேற்று துவங்கியுள்ளது. இதற்கு முன்பு அஜீத், விஜய் ரசிகர்கள் 200 அடி உயரத்தில் கட் அவுட் வைத்திருந்ததே சாதனையாக இருந்தது.
மிக நீண்ட காலத் தயாரிப்பில் இருந்த சூர்யாவின் ’என்.ஜி.கே’ படம் வரும் 31ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சோர்ந்து போயிருந்த சூர்யா ரசிகர்கள் தங்கள் உற்சாகத்தைக் காட்டும் வகியில் இச்செயலில் இறங்கியிருப்பதாக ட்விட்டர் பதிவுகளில் தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் என்ஜிகே. முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை மையப்படுத்திய இப்படம், வரும் 31ம் தேதி வெளியாகவுள்ளது. எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து தேவராஜ், பொன்வண்ணன், பாலா சிங், வேல ராமமூர்த்தி, குரு சோமசுந்தரம், அருள்தாஸ், இளவரசு ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இந்திய வரலாற்றில் முதன் முறையாக சூர்யாவுக்கு 210 அடியில் கட் அவுட் வைப்பதற்கான பணியை சூர்யா ரசிகர்கள் நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளனர். பணி முடியும்போது அது 210 அடிக்கும் மேலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக விஸ்வாசம் படத்திற்காக தல அஜித்திற்கு 190 அடியில் கட் அவுட்டும் ‘சர்கார்’ படத்துக்காக விஜய்க்கு 200 வைக்கப்பட்டது. அந்த இரண்டு சாதனைகளையும் முறியடிக்கும் முயற்சியில் சூர்யா ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.