
இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ' s3' படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 23 என்று அறிவிக்கப்பட்ட போதிலும் அதில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 'சிங்கம் 3' ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டால் அந்த தேதியில் அதாவது டிசம்பர் 23-ல் விஷாலின் கத்திச்சண்டை' வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
'கத்திச்சண்டை' திரைப்படம் ஏற்கனவே கடந்த நவம்பர் மாதமே ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் பாரத பிரதமரின் பணத்தட்டுப்பாடு அறிவிப்பு காரணமாக ரிலீஸ் தேதி ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
'சிங்கம் 3' மற்றும் 'கத்திச்சண்டை' படங்களின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.