
தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் உள்ள பாடல்களை பார்த்து பார்த்து கம்போஸ் செய்யும் தீவிர பணியில் இசையமைப்பாளர் அனிருத் ஈடுபட்டு வருகிறார், அதுவும் வேதாளம் படத்தை விட இன்னும் பாடல்கள் தூள் கிளப்பும் என ரசிகர்களுடன் கூறியுள்ளார்.
தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தின் ஒரு பாடலை மலேசியாவை சேர்ந்த பிரபல பாடகர், இசையமைப்பாளர் யோகி பி என்ற யோகேஸ்வரன் வீரசிங்கம் பாடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
யோகி பி, விஜய் நடித்த குருவி, தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' படப்பாடல்கள் உள்பட பல பாடல்கள் பாடியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' படத்தில் இடம்பெற்ற 'பூம் பூம் ரோபோ' பாடலுக்கு பின்னர் யோகி பி தமிழ் திரைப்படங்களில் பாடாத நிலையில் தற்போது ஏழு வருடங்களுக்கு பின்னர் 'தல 57' படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையில் அவர் ஒரு பாடலை பாடவுள்ளார்.
இந்த செய்தி வெளிவந்த ஒருசில நிமிடங்களில் யோகி பி, சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.