மீண்டும் இணையும் ஹரி - சூர்யா கூட்டணி... "சிங்கம் 4 " விளக்கம் கொடுத்த ஹரி... 

 
Published : Apr 25, 2017, 07:26 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
மீண்டும் இணையும் ஹரி - சூர்யா கூட்டணி... "சிங்கம் 4 " விளக்கம் கொடுத்த ஹரி... 

சுருக்கம்

surya and hari joined next part singam?

நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஹரி இணைந்து உருவாக்கிய சிங்கம் படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

 இந்த நிலையில் சிங்கம் 3' படத்தின் வெற்றி விழாவில் விரைவில் 'சிங்கம் 4' படத்திற்காக சூர்யாவும் நானும் இணைவோம்' என்று ஹரி கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது சூர்யா-ஹரி மிக விரைவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதுகுறித்து ஹரி கூறியபோது, 'இப்போதைக்கு நான் 'சாமி 2' படத்தின் ஆரம்பகட்ட பணியிலும், சூர்யா 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திலும் பிசியாக இருக்கின்றோம். 

மிக விரைவில் மீண்டும் இருவரும் இணைய முடிவு செய்துள்ளோம். ஆனால் அந்த படம் சிங்கம் படத்தின் 4வது பாகம் இல்லை. இது முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்' என்று கூறினார்.

சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தபின்னர் அவர் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு சூர்யா, மீண்டும் ஹரியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!