நடிகர் விவேக் சாரின் கடைசிப் படைப்பை பகிர்வது ஒரு கௌரவம்...! ப்ரோமோ வெளியிட்டு உருகிய சூர்யா..!

Published : Aug 14, 2021, 10:49 AM IST
நடிகர் விவேக் சாரின் கடைசிப் படைப்பை பகிர்வது ஒரு கௌரவம்...! ப்ரோமோ வெளியிட்டு உருகிய சூர்யா..!

சுருக்கம்

நடிகர் விவேக் கடைசியாக நடிகர் சிவாவுடன் தொகுத்து வழங்கிய காமெடி நிகழ்ச்சியான 'எங்க சிரி பாப்போம்' என்கிற நிகழ்ச்சியின் புரோமோவை வெளியிட்டு மிகவும் உருக்கமான கருத்துக்களை தெரிவித்துள்ளார் பிரபல நடிகர் சூர்யா.  

நடிகர் விவேக் கடைசியாக நடிகர் சிவாவுடன் தொகுத்து வழங்கிய காமெடி நிகழ்ச்சியான 'எங்க சிரி பாப்போம்' என்கிற நிகழ்ச்சியின் புரோமோவை வெளியிட்டு மிகவும் உருக்கமான கருத்துக்களை தெரிவித்துள்ளார் பிரபல நடிகர் சூர்யா.

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக். கடந்த  ஏப்ரல் மாதம் 16ம் தேதி மாராடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதய ரத்தக்குழாயில் ஏற்பட்ட அடைப்பு ஆஞ்சியோ மூலம் அகற்றப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணம் ஒட்டு மொத்த திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

சமூக சிந்தனையாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என பன்முக தன்மைகளுடன் வலம் வந்த விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் கொள்கையை பின்பற்றி வந்த விவேக், அவருடைய கோரிக்கையின்படி ஒரு கோடி மரங்களை நடும் முயற்சியில் இறங்கினார். இதுவரை சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை நட்டு உள்ள நிலையில் திடீரென மரணம் அடைந்தார். பின்னர் இவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சிலர், இவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்றுகளை நட்டனர்.

பல மரங்களை நட்டு, மக்கள் உயிர் வாழ ஆதாரமான ஆக்சியன் பெருகவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும், அரும் பணியை மேற்கொண்ட விவேக், ... தன்னுடைய காமெடி மூலம் அற்புதமான கருத்துக்களை ரசிகர்கள் மனதில் பதிய செய்தவர். இந்த உலகை விட்டு மறைந்தாலும், தன்னுடைய ஈடு இணையற்ற காமெடி மூலம் ரசிகர்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் விவேக் கடைசியாக “LoL- Last of laughing எங்க சிரி பார்ப்போம்” என்கிற நிகழ்ச்சியை பிரபல நடிகர் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து  தொகுத்து வழங்கி இருந்தார். வெளிநாடுகளில் மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சி தற்போது தமிழில் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் முதல் புரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது புரோமோவை நடிகர் சூர்யா வெளியிட்டு நிகிழ்ச்சி பதிவை போட்டுள்ளார் .

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது "அவர் நம் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்… நடிகர் விவேக் சாரின் கடைசிப் படைப்பை பகிர்ந்து கொள்வது தனக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய கௌரவமாக நினைக்கிறன். நம்மை சிரிக்க வைத்ததுடன் சமூகப் பொறுப்புள்ள மற்றும் முற்போக்கான எண்ணங்களையும் நமக்குள் பதிய செய்தவர்".  என தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 27 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!