
நேற்று முன் தினம் ‘என்.ஜி.கே’ படத்தின் இறுதி ஷூட்டிங் தினத்தன்று படப்பிடிப்பில் கலந்துகொண்ட ஊழியர்கள் அனைவருக்கும் தலா ஒரு பவுன் தங்கச்சங்கிலியை பரிசாக வழங்கி அசத்தியுள்ளார் நடிகர் சூர்யா.
துவக்கத்தில் பலத்த கருத்து வேறுபாடுகளுடன் இருந்த சூர்யா,தயாரிப்பாளர் தரப்பும் சமீபத்தில் பஞ்சாயத்துப்பேசி சமாதானத்துக்கு வந்தனர். இதையொட்டி படத்தை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய வழி வகுப்பதாக வாக்குக் கொடுத்த செல்வராகவன் நேற்றோடு படப்பிடிப்பை முடித்துக்கொண்டார்.
மாலை கடைசி ஷாட் முடிந்ததும் படப்பிடிப்புக் குழுவினர் கேக் வெட்டிக்கொண்டாட தயாரானபோது, யாரும் எதிர்பாராத சஸ்பென்சாக யூனிட் உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா ஒரு பவுன் தங்கச்சங்கிலி அளித்து அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தினார் சூர்யா. நேற்று படப்பிடிப்பில் இருந்த யூனிட் மெம்பர்களின் எண்ணிக்கை 120. நேற்றைய தங்கம் ஒரு பவுன் விலை ரூ 24000.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.