வெள்ளையனை வெளியேத்துங்க! பெப்பரை புரட்டி எடுத்து சாப்பிடுங்க: சூர்யா உடைக்கும் ஃபிட்னஸ் ரகசியம்.

 
Published : Jan 14, 2018, 06:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
வெள்ளையனை வெளியேத்துங்க! பெப்பரை புரட்டி எடுத்து சாப்பிடுங்க: சூர்யா உடைக்கும் ஃபிட்னஸ் ரகசியம்.

சுருக்கம்

Suriya fittness in cinema

சமகால தமிழ் நடிகர்களில் உடம்பை கோவில் போல் பேணிப் பாதுகாக்கும் நடிகர் சூர்யா! வடித்த கருங்கல் சிலையாக வாரிச் சுருட்டிக் கொண்டு கெத்தாக! நிற்கிறது அவரது உடல்.

அப்படி என்னதான் பண்றீங்க ப்ரோ, இப்படியொரு ஸ்ட்ரக்சர் அமையுறதுக்கு? என்று மாஸ் ஹீரோக்களே சூர்யாவிடம் வழிந்து கேட்பது ரெகுலராய் நடக்கும் விஷயம்.

ஆமாம் சூர்யா அப்படி என்னதான் செய்கிறார்? இப்படியொரு உடம்பு மெயிண்டெய்ன் ஆகுறதுக்கு...

இதற்கு சூர்யாவே பதில் சொல்கிறார் இப்படி...”உடம்பை கட்டுக்கோப்பாக மெயிண்டெய்ன் பண்றதை நான் கத்துக்கிட்டது அப்பாகிட்டதான். அவரோட ஜீன் எனக்குள்ளே இருக்கிறதாலே அதுவும் சப்போர்ட் பண்ணுது.

ஆனாலும் அதையெல்லாம் தாண்டி நானும் வெளியிலிருந்து நிறையவே எஃபோர்ட்ஸை போட்டுத்தான் என் உடம்பை ஃபிட்டாக வடிவமைச்சு கொண்டு போயிட்டிருக்கேன். குறிப்பா சாப்பாடு விஷயத்துல ரொம்ப தெளிவா இருக்கிறதுதான் பெரிய அளவுல கைகொடுக்குது.

கஜினி படத்தை ஹிந்தியில எடுத்தப்ப அமீர்கான் சாரை நேர்ல பார்த்தேன். அப்போ இருந்துதான் ஃபிட்னெஸ் மேலே எனக்கு பெரிய ஆர்வம் வந்துச்சு. அதுக்கு அப்புறம் பக்காவா ஒரு டயட் சார்ட் தயாரிச்சு அது படியே வாழ்றேன்.

ரொம்ப கடினமா உழைச்சு என்னோட எடையை எழுபது  கிலோவுல இருந்து பதினோறு கிலோ இறக்குனேன். நானும், ஜோதிகாவும் அடிக்கடி வெளியில ஹோட்டலுக்கு போயி சாப்பிடுறதை வழக்கமா வெச்சிருந்தோம். ஆனால் உடம்பு ஃபிட்னஸ்காக அதை தியாகம் பண்ணியிருக்கோம்.

வெள்ளை சர்க்கரை, வெள்ளை ரொட்டி, அரிசி, பொரித்த உணவுகள் இதையெல்லாத்தையும் முற்றிலுமா தவிர்த்திருக்கேன். சிம்பிளா சொன்னா இந்த மூன்று வெள்ளையர்களையும் வெளியேற்றிட்டேன். வேக வைத்த சிக்கன், மீன், முட்டையோட வெள்ளை கரு...அப்படின்னு பார்த்து பார்த்து சாப்பிட ஆரம்பிச்சேன். தினமும் ஜிம்மில் அரைமணி நேரம் ஏரோஃபிக்ஸுடன் சேர்த்து ரெண்டு மணி நேரம் ஒர்க் அவுட் பண்றேன்.

அது முடிஞ்சதும் புரோட்டீன் கலந்த பால் குடிக்கிறேன். அதிகமா பழங்கள், வேகை வைத்த காய்கறிகள் சாப்பிடுறேன். வாரத்துல ஒரு நாள் உப்பை முழுவதுமா தவிர்த்து வெறும் மிளகு தூவிய சிக்கன், மீன் சாப்பிடுவேன். காஃபி, டீ குடிக்கிற பழக்கமே கிடையாது. இதுதான் என்னோட ஃபிட்னஸ் ரகசியம்.” என்றிருக்கிறார்.

எங்க பாஸ் கிளம்பிட்டீங்க?... ! ஜிம்முக்கா! வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி