கவிதை எழுதத் தெரிந்திருந்தால் பிழைத்துக் கொள்ளலாம் : இயக்குநர் லிங்குசாமி 

Asianet News Tamil  
Published : Jan 13, 2018, 06:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
 கவிதை எழுதத் தெரிந்திருந்தால் பிழைத்துக் கொள்ளலாம் : இயக்குநர் லிங்குசாமி 

சுருக்கம்

lingu samy release tha haikoo book lingu

​​இயக்குநர் லிங்குசாமியின் " லிங்கூ-அய்க்கூ" புத்தக வெளியிட்டு விழா நேற்று மாலை சென்னை ரஷ்யன் கல்சுரல் சென்டரில் வைத்து நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் - நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், நடிகை கீர்த்தி சுரேஷ், பேராசிரியர் ஞானசம்பந்தம், இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல் , வசந்தபாலன் , கவிஞர் பிருந்தா சாரதி, நடன இயக்குநர் ராஜு சுந்தரம், எழுத்தாளர் S.ராம கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

"லிங்கூ – ஹைக்கூ " நூல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் லிங்கு

​​சாமி கூறியது : தாகூரின் கவிதை ஒன்று நினைவுக்கு  வருகின்றது சரியானவற்றை நீ தேர்ந்தெடுப்பதில்லை சரியானவை உன்னை தேர்ந்தெடுக்கின்றன. அவ்வாறு அமைந்தது தான் என்னுடைய அனைத்து நண்பர்களும் இந்த மேடையும். இங்கு மேடையில் உள்ள அனைத்து நபர்களுடனும் 25 வருடம் அல்லது 25 மாதங்களாக இருக்கலாம் ஆனால் இவர்களிடம் நீண்ட ஒரு பிடிப்பு உள்ளது.

பாலாஜி சார் தான் முதல்முறையாக என்னுடைய கவிதையைப் படித்துக் காட்டி என்னை உதவி இயக்குனராக சேர்த்துவிட்டார். பாலாஜி சாரை அறிமுகப்படுத்திய பாலன். இதே புஷ்கின் இலக்கிய பேரவைக்காக ஒரு மூன்று வரி கவிதையை எழுத வேண்டும் என்று முதல் முதலாக சந்தித்த பிருந்தா சாரதி  இப்போது அதே ஹாலில் என்னுடைய கவிதை புத்தகத்தை வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 

ஒரு மூன்று வரி கவிதை விகடனில் எழுதி 30 ரூபாய் பணம் வந்த பிறகு எப்படியும் எழுதி பிழைத்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தான் நான் சென்னைக்கு வந்தேன். இப்போதும் இதற்கு முன்பு கவிதை வெளியீட்டு விழாவில் கூறியது போன்று நம்மிடம் இருந்து எல்லாம் போன பின்பும் கவிதை எழுதத் தெரிந்தால் பிழைத்துக்கொள்ளலாம் என்றார்.

விஷால் பேசியது :- எனக்கும் கவிதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என்னை ஏன் லிங்குசாமி இங்கே அழைத்தார் என்று தெரியவில்லை. எனக்கு அவரை இயக்குநர் லிங்குசாமியாகத் தான் தெரியும். எனக்கு கவிதை , புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை. ஆனால் இன்று முதல் இயக்குநர் லிங்குசாமி “ லிங்கு ஹைக்கு “ புத்தகம் கண்டிப்பாக என்னுடைய அறையில் இருக்கப் போகிறது. இது தான் நான் வாசிக்கப் போகும் முதல் கவிதை புத்தகம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவரே சொந்தமாக ஒரு கவிதையை எழுதி வந்து வாசித்து அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்றார். “ கரப்பான் பூச்சியை “ மையமாக கொண்ட கவிதை ஒன்றைக் கூறி இது தான் எனக்குப் பிடித்த கவிதை என்று கூறினார்.

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் தமிழ் பேசாத இக்காலத்தில். கீர்த்தி சுரேஷ் தமிழில் கவிதை ஒன்றைக் கூறியது, தனக்குப் பிடித்த தமிழ்க் கவிதை பற்றி பேசியது தங்களுக்கு ஆச்சரியமாக இருந்ததாக பேசிய எழுத்தாளர்கள் அனைவரும் கூறினார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் ஜெயிலுக்கு போகும் அறிவுக்கரசி.... பாசத்தால் அடிக்கும் ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
BIGBOSS: "அந்த விருதைத் தொடக்கூட எனக்குத் தகுதியில்லையா?" - பிக் பாஸ் 9 மகுடம் சூடிய திவ்யா கணேஷ் உருக்கம்!