நதியா செய்த காரியத்தால்... வில்லியான ரம்யா கிருஷ்ணா...! 

 
Published : Jan 13, 2018, 06:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
நதியா செய்த காரியத்தால்... வில்லியான ரம்யா கிருஷ்ணா...! 

சுருக்கம்

ramya krishnan repalce the nathiya character

ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய இயக்குனர் தியாகராஜா குமார ராஜா தற்போது சூப்பர் டீலக்ஸ் என்கிற படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தில், நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க சமந்தா ஹீரோயின்னாக நடிக்க உள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நதியா... ஆரண்ய காண்டம் படம் பிடித்து போனதால் கதையைக் கேட்காமலேயே படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டாராம்.

பின்புதான் தெரிந்ததாம் அது மிகவும் கொடுமைக்கார வில்லி கதாபாத்திரம் என்று! இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தால் தன்னுடைய இமேஜ் கேட்டுப் போய் விடும் என எண்ணி தற்போது இந்தப் படத்தில் இருந்து விலகிக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். 

மேலும் இவருக்கு பதில் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்தப் படத்தில் இருந்து விலகியது குறித்து பேசியுள்ள நதியா, சூப்பர் டீலக்ஸ்  படத்தில் நான் நடிக்க கமிட் ஆனது உண்மைதான் ஆனால் படத்தில் இருந்து விலகியது குறித்து பேச விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒருத்தர விடல; வீடு புகுந்து எல்லோரையும் தூக்கிய போலீஸ்: பாக்கியத்தின் ரிவெஞ்ச் ஸ்டார்ட்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி புரோமோ!
ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!