இது படமில்லை... மாமன்னன் பார்த்துட்டு சிவகுமார் அனுப்பிய மெசேஜ் பார்த்து மனம் உருகிய மாரி செல்வராஜ்

By Ganesh A  |  First Published Aug 3, 2023, 11:29 AM IST

மாமன்னன் படம் பார்த்த நடிகர் சிவகுமார், இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி அனுப்பியுள்ள மெசேஜ் இணையத்தில் கவனம் பெற்று உள்ளது.


மாரி செல்வராஜ் இயக்கிய மூன்றாவது திரைப்படம் மாமன்னன். இதற்கு முன் அவர் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அதேபோல் தான் தற்போது மாமன்னன் திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.72 கோடி வசூலித்த சாதனை படைத்த நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.

ஓடிடியில் வெளியான பின்னர் இப்படத்திற்கு உலகளவில் மவுசு அதிகரித்துள்ளது. இப்படத்தை வெளியிட்டுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம், நேற்று ஒரு போஸ்டரை வெளியிட்டிருந்தது. அதன்படி மாமன்னன் திரைப்படம் உலகளவில் அதிகம் பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் 9 இடத்திலும், இந்தியாவில் நம்பர் 1 இடத்தில் உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது. தியேட்டரை தொடர்ந்து ஓடிடியிலும் மாமன்னன் படத்துக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்ததால் படக்குழு உற்சாக மடைந்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... அக்கா, தங்கச்சியை கல்யாணம் பண்ணிய நவரச நாயகன்... தாய் - தந்தையின் பிரிவு பற்றி மனம்திறந்த கவுதம் கார்த்திக்

அதுமட்டுமின்றி மாமன்னன் படத்தை ஓடிடியில் பார்த்த ஏராளமான திரைப் பிரபலங்களும் அப்படத்தை பாராட்டி பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அண்மையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாமன்னன் படத்தை பார்த்து பாராட்டி இருந்த நிலையில், தற்போது சூர்யாவின் தந்தையும், நடிகருமான சிவகுமார் அப்படம் பார்த்து இயக்குனர் மாரி செல்வராஜை புகழ்ந்து தள்ளி உள்ளார். 

இதுகுறித்து அவர் அனுப்பிய மெசேஜில், தம்பி மாரி செல்வராஜுக்கு! மாமன்னன் திரைப்படம் பார்த்தேன். இது படமில்லை. உங்கள் வாழ்க்கையில் கண்ட வலி. பாதிக்கப்பட்டவன் தான் இவ்வளவு ஆழமாகச் சொல்ல முடியும். திரைப்படம் மூலம் இன்னும் நீங்கள் சொல்ல வேண்டிய செய்தி நிறைய உள்ளது. உங்களையும் வடிவேலுவையும் சந்தித்து ஆரத்தழுவ எண்ணுகிறேன். விரைவில் சந்திப்போம்” என குறிப்பிட்டுள்ளார். இதற்கு மாரி செல்வராஜும் நன்றி தெரிவித்துள்ளார்.

Heartfelt!! ❤️
Thank you Sir for such praise! … pic.twitter.com/0qmdodVFAh

— Mari Selvaraj (@mari_selvaraj)

இதையும் படியுங்கள்... நடிகர் மாரிமுத்து மீது குவியும் புகார்கள்.... எதிர்நீச்சல் தொடருக்கு சிக்கல் வருமா?

click me!