தந்தையை இழந்து தவிக்கும் அஜித்... தம்பி கார்த்தி உடன் சென்று ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா

Published : Mar 27, 2023, 12:20 PM ISTUpdated : Mar 27, 2023, 12:58 PM IST
தந்தையை இழந்து தவிக்கும் அஜித்... தம்பி கார்த்தி உடன் சென்று ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா

சுருக்கம்

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் இல்லத்திற்கு சென்ற நடிகர்கள் சூர்யா, கார்த்தி, தந்தையை இழந்து வாடும் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.

நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் கடந்த பிப்ரவரி 24-ந் தேதி மரணமடைந்தார். கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அன்றைய தினமே சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அஜித் தந்தையின் உடல் தகனம் செய்யப்பட்டது. அஜித்தின் தந்தை மறைவு செய்தி கேட்டு ஏராளமானோர் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்தனர்.

அதேபோல் சினிமா பிரபலங்கள் பலர் நடிகர் அஜித்தின் வீட்டிற்கு சென்று அவரை இல்லத்தில் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின், நடிகர் விஜய், இயக்குனர் பார்த்திபன் ஆகியோர் அஜித்தின் இல்லத்துக்கு சென்று அவரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துவிட்டு வந்தனர். இதையடுத்து மேலும் சில பிரபலங்களும் அஜித்தின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இதையும் படியுங்கள்.. 10 பெண்களுடன் உடலுறவு வைத்திருப்பதாக கூறிய ஜெயிலர் பட நடிகரை விவாகரத்து செய்து பிரிந்த மனைவி

இந்நிலையில், இன்று நடிகர் சூர்யா, தனது தம்பி கார்த்தியுடன் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது அஜித்தின் குடும்பத்தினரும் உடன் இருந்தனர். சூர்யாவும், கார்த்தியும் ஒன்றாக காரில் அஜித் வீட்டிற்குள் சென்றபோது எடுத்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்.. திடீரென பிளானை மாற்றிய அஜித்... தள்ளிப்போகும் ஏகே 62..! ஷூட்டிங் எப்போ ஆரம்பம்? சுடசுட வெளிவந்த அப்டேட் இதோ

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!