சீறிவரும் காளையின் சின்னத்தோடு வெளியான சூர்யாவின் 'வாடிவாசல்' டைட்டில் லுக்..!

Published : Jul 16, 2021, 06:10 PM IST
சீறிவரும் காளையின் சின்னத்தோடு வெளியான சூர்யாவின் 'வாடிவாசல்' டைட்டில் லுக்..!

சுருக்கம்

நடிகர் சூர்யா நடித்து வரும் 'வாடிவாசல்' படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காளையின் சின்னத்தோடு வெளியாகி, சமூக வலைத்தளங்களில் இந்த போஸ்டர் கெத்து காட்டி வருகிறது.  

நடிகர் சூர்யா நடித்து வரும் 'வாடிவாசல்' படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காளையின் சின்னத்தோடு வெளியாகி, சமூக வலைத்தளங்களில் இந்த போஸ்டர் கெத்து காட்டி வருகிறது.

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'சூரரை போற்று' திரைபடம் அடுத்தடுத்த சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. மேலும் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியிலும் தற்போது படக்குழு இறங்கியுள்ளது. சமீபத்தில் இது குறித்து அதிகார பூர்வ தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் சூர்யா வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்க உள்ள 'வாடி வாசல்' படம் குறித்த லேட்டஸ்ட் நேற்று வெளியானது.

கொரோனா இரண்டாவது அலை தற்போது தணிந்துள்ள நிலையில், மத்திய - மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பை நடத்த அனுமதி கொடுத்துள்ளது. எனவே, பாதியில் நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகள் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது சூர்யா நடித்து வரும் 'வாடி வாசல்' படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டது.

அதாவது, இன்று  'வாடிவாசல்' படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். படக்குழு அறிவித்த நேரத்தில் வித்தியாசமான டைட்டில் லுக் வெளியாகியுள்ளது. இதில் சீறிவரும் காளையின் சின்னம் இடம்பெற்றுள்ளது. 

 

ஏற்கனவே 'வாடி வாசல்' படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்ட நிலையில் , அடுத்தப்பட்ட படப்பிடிப்பு  விரைவில் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. தாணு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு, வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது சூர்யா, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வரும் 'சூர்யா 40 ' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அய்யய்யோ மீனா கண்டுபிடிச்சிட்டாளே... சீட்டிங் பண்ணி சிக்கிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
அஞ்சானை அரெஸ்ட் பண்ண உத்தரவா? கைது நடவடிக்கை பற்றி உண்மையை போட்டுடைத்த லிங்குசாமி