சூர்யா முடிவால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..! நயன்தாராவை தொடர்ந்து இவரும் இப்படி பண்ணுறாரே..?

By manimegalai aFirst Published Jul 29, 2021, 2:12 PM IST
Highlights

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெய்பீம்' திரைப்படம், திரையரங்கில் ரிலீசாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, இப்படம் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் திரைப்படம், திரையரங்கில் ரிலீசாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, இப்படம் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யாவின் 39 ஆவது படமாக உருவாகியுள்ளது 'ஜெய்பீம்'. இந்த படத்தில், சூர்யா சிறப்பு தோற்றத்தில் வக்கீலாக நடிக்கிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் வெளியிடப்பட்டது. அதில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களின் உரிமையை மீட்க சட்ட ரீதியாக போராடும் வழக்கறிஞராக நடித்துள்ளார் என்பது தெரிந்தது.

இந்த படத்தை இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கி உள்ளார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், 'கர்ணன்' பட நாயகி  ரஜிஷா விஜயன், லிஜோ மோல்,  உள்பட பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் '2d என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்' தயாரித்துள்ள இந்த படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைத்துள்ளார். தற்போது கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் கட்டுக்குள் வந்து விட்டதில் விரைவில் திரையரங்கம் திரைப்படம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் ஓடிடி தளத்தில் படங்களை உடனுக்குடன் பார்த்தாலும், பெரிய நடிகர்களின் படங்களை திரையரங்கில் பார்க்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது. எனவே சூர்யாவின் 'ஜெய்பீம்' திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் முயற்சியில் சூர்யா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுவது சூர்யா ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஏற்கனவே சூர்யா நடித்த 'சூரரை போற்று' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானதை தொடர்ந்து இந்த படமும் ஓடிடி தளத்தில் தான் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் நயன்தாராவின் 'நெற்றிக்கண்' படமும் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது. அடுத்தடுத்து முன்னணி நடிகர் - நடிகைகளின் படங்கள் இப்படி ஓடிடி தளத்தில் வெளியாவது, ரசிகர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு செம்ம ஷாக் என்றே கூறலாம். எனவே எப்போது திரையரங்கம் திறக்க அரசு அனுமதி கொடுக்கும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பதாகவும் உள்ளது.
 

click me!