
சூர்யாவின் பிறந்தநாளான இன்று, ரசிகர்கள் எதிர்பாராத பல அப்டேட் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இன்று மாலை சூர்யா-வின் 39 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
சூர்யாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டாலும், அவரது ரசிகர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே காமன் டிபி வெளியிட்டு கொண்டாட துவங்கி விட்டனர். மேலும் நேற்றைய தினம், சரியாக மாலை 6 மணிக்கு, சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் 'எதற்கும் துணிந்தவன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், 12 மணிக்கு செகண்ட் லுக் மற்றும், இன்று மதியம் மூன்றாவது லுக் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகியது.
இந்நிலையில் சூர்யா ரசிகர்களுக்கு இன்று மாலை காத்திருக்கும் சூப்பர் நியூஸ் குறித்த தகவலை சூர்யாவின் 39 ஆவது படத்தின் படக்குழு அறிவித்துள்ளது. அதாவது சூர்யா நடித்துவரும் 39வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா ரசிகர்கள் சற்றும் இந்த தகவலை எதிர்பார்க்காத நிலையில் அவர்களுக்கு இது ஸ்வீட் சர்பிரைஸாகவே அமைந்துள்ளது.
இந்த படத்தை தா.செ.ஞானவேல் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க வில்லை என்றாலும் மிக முக்கியமான சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், 'கர்ணன்' பட நாயகி ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் '2d என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைத்து வருகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.