என்னாது? விக்ரம் மகனுக்கு ஜோடியாக சூர்யா மகள்!?

 
Published : Oct 12, 2017, 04:03 PM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
என்னாது? விக்ரம் மகனுக்கு ஜோடியாக சூர்யா மகள்!?

சுருக்கம்

Suriya jyothika daughter act with vikram son

விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக தமிழ் சினிமாவில் களம் இறங்குகிறார். சேது படத்தின் மூலம் விக்ரமுக்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கிகாரம் கொடுத்த இயக்குனர் பாலா தான் இவரின் மகன் முதல் படத்தை இயக்கவுள்ளார். 

தெலுங்கு சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  வெளியாகி இளைஞர்களின் மனம் கவர்ந்த படம் தான் அர்ஜுன் ரெட்டி. இப்படத்தின் ரீமேக்கின் மூலம் நடிகர் விக்ரமின் மகன் துருவ் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.

இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி படத்தில் நாயகியாக கமல்ஹாசன் மகள் அக்ஷாரா ஹாசன் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, சூர்யா, ஜோதிகா நடித்த ''சில்லுனு ஒரு காதல்'' படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்த ஷ்ரியா ஷர்மாவிடமும் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

இதனால் விக்ரம் மகனுக்கு ஜோடி கமல் மகளா? சூர்யா ஜோதிகாவின் மகளா? என்பதை படக்குழு விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!