ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பர்த்டே பேபி... சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் ட்வீட்...!

Web Team   | Asianet News
Published : Dec 13, 2019, 11:16 AM IST
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பர்த்டே பேபி... சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் ட்வீட்...!

சுருக்கம்

இந்நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்களுக்கும், வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைத்துறையினர் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் "தர்பார்" படத்தில் நடித்து முடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் "தலைவர் 168" என்ற படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள அந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், பரோட்டா சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கான பூஜை சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.  இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தெறிக்கவிட்டனர். 

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, திரைத்துறையினர், அரசியல் கட்சி தலைவர்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சோசியல் மீடியாவில் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனால் சோசியல் மீடியாவில் #HBDSuperstarRajinikanth,#HappyBirthdaySuperstar, #HBDThalaivarSuperstarRAJINI, #HappyBirthdayRajinikanth, #HBDRajiniKanth போன்ற  ஹேஷ்டேக்குகள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகின. 

இந்நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்களுக்கும், வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைத்துறையினர் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரஜினி தனது டுவிட்டர் பதிவில் முதலில் ரசிகர்களை குறிப்பிட்டுள்ளது, அவரது ஃபேன்ஸை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்: ராஜீ முதல் தங்கமயில் வரை இன்றைய அப்டேட்ஸ்!