
பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை மீண்டும், மீண்டும் நிரூபித்து வரும் சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் திருவிழா போல செம்ம மாஸாக இருக்கும். அன்னதானம், கோவில்களில் சிறப்பு பூஜை, ஏன் சில ரசிகர்கள் பலவகையான வேண்டுதல்களைக் கூட நிறைவேற்றுவார்கள். தர்பார் படத்தின் ஷூட்டிங்கை வெற்றிகரமாக முடிந்துள்ள சூப்பர் ஸ்டார், நேற்று தனது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். என்னடா நம்ம தலைவர் பிறந்தநாள் டிசம்பர் 12ம் தேதி தானேன்னு யோசிக்கிறீங்களா?. இது ரஜினிகாந்தின் நட்சத்திர பிறந்தநாள்.
போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் சிவாச்சாரியார்களைக் கொண்டு யாகம் வளர்த்து, பூஜைகள் செய்துள்ளார். வேத மந்திரங்கள் முழக்க மனைவி கலாவுடன் ரஜினிகாந்த் பூஜையில் பங்கேற்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெற லெவலுக்கு வைரலாகி வருகிறது. மேலும் #HBDRajinikanth #HBDSuperStar போன்ற ஹேஷ்டேக்குகளும் டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.
நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நட்சத்திரமான திருவோணம் நாள் என்பதால், நேற்று நட்சத்திர பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது. தனக்கு பூஜைகள் செய்து ஆசி வழங்கிய சிவாச்சாரியார்களுடன் ஒன்றாக நின்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போட்டோ எடுத்துக் கொண்டார். மேலும் சூப்பர் ஸ்டாரின் நட்சத்திர பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் அவரது ரசிகர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.