
ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்த் கூட்டணியில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ள "தர்பார்" திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இருப்பினும் சூப்பர் ஸ்டாரின் மாஸ் எண்டர்டெயின்மென்ட்டை காண ரசிகர்கள் குடும்பம், குடும்பமாக தியேட்டர்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். ராக் ஸ்டார் அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பியுள்ளன.
'ஆதித்யா அருணாச்சலம்' என்ற மும்பை போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்துள்ள "தர்பார்" திரைப்படம் வசூலில் பட்டையைக் கிளப்பியுள்ளது. சினிமா ஐ.சி.யு.வில் இருக்கும் இந்த வேளையில் நான் மட்டுமே ஆக்சிஜன் என்று ரஜினி புரிய வைத்த அதகளமே "தர்பார்". முதல் பாதி, இரண்டாம் பாதி என எவ்வித பாகுபாடும் இல்லாமல் படம் சூப்பராக இருப்பதாக சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ட்ரெண்ட் இனி வொர்க் அவுட் ஆகாது, ரஜினி படம் தேறாது, தர்பார் ஊத்திக்கிச்சு என ரக, ரகமாக சோசியல் மீடியாவில் பரவி வந்த கமெண்ட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தர்பார் படத்தின் உலக அளவிலான வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர்களில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆன தர்பார் திரைப்படம், இந்தியாவில் மட்டும் இதுவரை 132 கோடி வசூல் செய்துள்ளதாம். வெளிநாடுகளில் 56 கோடியும், பிற இடங்களில் 5 கோடியும், ஆக மொத்தம் இதுவரை 193 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் விரைவில் தர்பார் 200 கோடி கிளப்பில் இணைந்துவிடும் என்று விநியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.