
தல அஜித்தின் 48 ஆவது பிறந்த நாள் அஜித் ரசிகர்களால் நேற்று மிகவும் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். ரசிகர்கள் சிலர் பல்வேறு உதவிகள் செய்தும், வெடி வெடித்து, ஆட்டம் பாட்டம் என பட்டையை கிளப்பி விட்டனர்.
மேலும் பல பிரபலங்கள், அஜித்தின் பிறந்த நாளுக்கு சமூக வலைத்தளம் மூலம் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அந்த வகையில், விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அனைவராலும் அறியப்பட்ட, போட்டியாளர்களின் ஒருவரான அனுஷ்யா, 'என்னை அறிந்தால்' படத்தில் இடம்பெற்ற உனக்கென்ன வேண்டும் சொல்லு பாடலை பாடி அஜித்துக்கு தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இவரின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.