
நடிகை சன்னி லியோனுக்கு பாலிவுட், கோலிவுட், என அனைத்து திரையுலகியும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவர் எப்போது தமிழ் திரைப்படங்களில் நடிப்பார் என ஒரு சிலர் காத்திருக்கின்றனர் என்று கூறலாம்.
இந்நிலையில் சன்னி லியோன் பெங்களுரின் கலந்துக்கொள்ள இருந்த 2018 புத்தாண்டு விழா ரசிகர்களின் பாதுகாப்பு கருதி அந்த நிகழ்ச்சி தடை செய்ய வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டதால் அதனை ஏற்றுக்கொண்ட சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு ஆவலாக காத்திருந்த ரசிகர்களுக்கு விளக்கமும் கொடுத்து வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
தற்போது தமிழ், மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ள சன்னி லியோன் .படத்தின் தலைப்பு வரும் 27 தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்போது சன்னி லியோன் கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிக்காக லண்டனில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.