
Sunny Leone New Movie : பப்பராஜி என்டர்டெயின்மென்ட் மற்றும் சன்சிட்டி எண்டெவர்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து வினில் வாசு இயக்கும் படத்தில் சன்னி லியோன் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். 'கௌர் vs கோர்' என்பது படத்தின் பெயர். 2070-ம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட இப்படம், நம்பிக்கை, அடையாளம் மற்றும் உயிர்வாழ்வது குறித்து பேசுகிறது. அறிவியலும், நம்பிக்கையும் மோதும் உலகில் கதை நடக்கிறது. நம்பிக்கை, விசுவாசம் மற்றும் உண்மையின் மதிப்பு போன்ற கேள்விகளை எழுப்பும் ஒரு மோதலின் மூலம் விதியால் பிரிக்கப்பட்ட இரண்டு சகோதரிகளின் பயணத்தை இப்படம் சொல்கிறது.
இயக்குனர் வினில் வாசு கூறுகையில் "இந்தப் படம் இரண்டு சகோதரிகளின் கதை மட்டுமல்ல. நாம் நம்புவதற்கும், நாம் பயப்படுவதற்கும் இடையிலான சமூகத்தின் போராட்டமும் கூட. 2026 கோடையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
'கௌர் vs கோர்' ஒரு திரைப்படம் மட்டுமல்ல, எல்லைகளைக் கடக்கும் ஒரு சினிமா சோதனை. AI-ஐ பயன்படுத்தி, உணர்ச்சிகளையும், நாடகத்தையும், உலக சினிமாவுக்கு சவால் விடும் அளவையும் உருவாக்க முடியும் என்பதை நிரூபிப்பதே எனது நோக்கமாக இருந்தது.
AI திரைப்படத் துறையில் இந்தியா தலைமைப் பாத்திரத்தை வகிக்க முடியும் என்பதை உலகுக்குக் காட்டுவதே இந்தத் திட்டம். தொழில்நுட்ப உலகில் இந்தியா எப்போதும் முன்னணியில் உள்ளது. ஆரம்பம் முதலே இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் பெருமையான விஷயம்," என்று கூறினார்.
பப்பராஜி என்டர்டெயின்மென்ட் நிறுவனரும் தயாரிப்பாளருமான அஜிங்க்யா ஜாதவ் பேசுகையில் "எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் 'கோர்' என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி VFX பயன்படுத்தி ஒரு சிறிய ப்ரோமோவை படமாக்கினோம். அப்போது தொழில்நுட்பம் இன்றைய அளவுக்கு முன்னேறவில்லை. இன்று அது சாத்தியமாகிவிட்டதால், இந்தியாவின் முதல் AI சூப்பர் ஹீரோ திரைப்படத்தை உருவாக்குவதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்" என கூறினார். "படத்தில் சன்னி லியோனின் இரட்டை வேடங்கள் பாரம்பரியமானதாகவும் அதே சமயம் எதிர்காலக் கண்ணோட்டத்துடனும் இணைந்தவை". இப்படம் தற்போது ப்ரீ-புரொடக்ஷன் நிலையில் உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.