மூன்று நாயகர்களை வைத்து இயக்கும் சுந்தர் சி.. பிக்பாஸ் பிரபலம் தான் ஹீரோயினியாம்...

Kanmani P   | Asianet News
Published : Feb 04, 2022, 01:46 PM IST
மூன்று நாயகர்களை வைத்து இயக்கும் சுந்தர் சி.. பிக்பாஸ் பிரபலம் தான் ஹீரோயினியாம்...

சுருக்கம்

இந்த படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த் என மூன்று ஹீரோக்கள் நடிக்க உள்ளனர். ராசி கண்ணா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர். குஷ்புவின் அவ்னி மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

‘தலைநகரம்’ படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இப்படத்தை இயக்குனர் வி.இசட்.துரை இயக்குகிறார். இப்படத்தில் சுந்தர் சி கதாநாயகனாக நடித்து வருகிறார். இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘தலைநகரம் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் சுந்தர் சி சிகரெட் பிடித்தபடி போஸ் கொடுத்தவாரு இருக்கிறார். மேலும் அதில் அவரது கதாபாத்திரத்தின் பெயரான ‘ரைட்டு’ மீண்டும் வந்துவிட்டார்  என குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் சுந்தர் சி ஹீரோவாக நடிக்கும் தலைநகரம் 2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது. இயக்குனர் நடிகர் என படு பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் சுந்தர் சி தற்போது அடுத்து இயக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜை சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த் என மூன்று ஹீரோக்கள் நடிக்க உள்ளனர். ராசி கண்ணா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர். குஷ்புவின் அவ்னி மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஜீவா ஜெய் சுந்தர் சி கூட்டணியில் ஏற்கனவே கலகலப்பு-2 வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டடித்தது இந்த நிலையில் மீண்டும் இதே கூட்டணி இப்பொழுது மீண்டும் இணைந்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது அதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இதர நடிகர் நடிகைகளின் விவரங்கள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அங்கம்மாள் திரைப்படம் சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ
அடிபொலியாக இருந்ததா குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸ்...? முழு விமர்சனம் இதோ