
சீரியலுக்கு பேர் போனது பிரபல தொலைக்காட்சியான சான் டிவி. காலையில் இருந்து நடு ராத்திரி வரை வரிசையாக நாடகங்கள் ஒளிபரப்ப படுகிறது. கலாநிதி மாறனுக்கு சொந்தமான இந்த சேனல் 1993-ம் ஆண்டு லாஞ்ச் செய்யப்பட்டது முதல் சீரியல்கள் மூலம் இல்லத்தரசிகளை கவர்ந்து வருகிறது.
இதில் ஒளிபரப்பட்ட நிம்மதி உங்கள் சாய்ஸ் முதல் மெட்டி ஒளி வரை இன்றும் பிரபலம் . அதில் சித்தியை யார் தான் மறந்திருப்பார்கள் . கார்டுன்ஸ் அதிகமில்லாத 90 களில் த்ரில்லர் தொடர்காளானவிடாது கருப்பு, ஜீபூம்பா என மிரட்டி இருந்தது சான் நெட்வொர்க்.. வர இறுதியில் டாப் 10 மூலம் புது படத்தை வீட்டிலேயே பார்த்து விடலாம்.. அதோடு ஞாயிறு படத்திற்காக அக்கம் பக்கத்தினர் ஒரே வீட்டில் கூடும் சுவாரஸ்யமும் நடப்பதுண்டு.
அன்று முதல் இன்று வரி சீரியல் டாப் என்றால் அது சன்டிவி தான். காலத்திற்கு ஏற்றார் போல கதாபாத்திரங்கள் மாறியிருந்தாலும் சென்டிமென்ட் எண்ணமோ என்றும் ஒரே மாதிரி தான். அப்போதெல்லாம் அழுகை அதிகமாக இருக்கும் ஆனால் இப்போது சினிமாவை மிஞ்சும் ரொமான்ஸும், ட்விஸ்டுகளும் அதிகம் இருக்கின்றன.. 90 களில் பெரும்பாலும் பெண் அடிமையாக இருப்பது போல சித்திரிக்கப்பட்டன. ஆனால் தற்போது முன்னேறிய படித்த பெண்கள் காட்டப்படுகிறார்கள்..என்ன மாறுதல் என்றாலும் தாய்மைக்கு தனி இடமுண்டு.
அதன்படி சுவராஸ்யம் குறையும் சீரியல் நாயகிகளை கர்ப்பமாக கட்டுவது வழக்கமாகி விட்டது..அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான நாடகங்களில் நாயகிகள் கர்ப்பமாக உள்ளனர். மதியம் ஒளிபரப்பாகும் சந்திரலேகாவில் நாயகிகள் இருவரும் கர்ப்பம், பிள்ளைக்காக போராடும் தாலாட்டில் நாயகி திடீர் கர்ப்பம், சுந்தரியின் நாயகியின் கணவன் மனைவி கர்ப்பம், பூவே உனக்காக வில் நாயகி கர்ப்பம், கயலில் நாயகியின் தங்கை திருமணத்திற்கு முன் கர்ப்பம் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.